search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்-அமைச்சர்கள் பேச்சு
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு பரிசு வழங்கினர்.

    மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்-அமைச்சர்கள் பேச்சு

    • மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பேசினர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலைய ரங்கத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி களில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் நவாஸ்கனி, தனுஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகு ராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது மட்டுமின்றி அவர்களை விளையாட்டு துறையிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்று சிறந்து விளங்கு கின்றனர்.

    விருதுநகர் மாவட்டமும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. மாணவ-மாணவிகள் விளையாட்டிலும் சாதனை படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    Next Story
    ×