கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் சங்கரன் கோவில் அருகே உள்ள ஐ.என்.டி. யு.சி. நகரில் சிங்கத்து இருளப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூசாரி மாரியப்பன் பூஜை களை முடித்துவிட்டு இரவு கோவில் கதவை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை மாரியப்பன் பூஜைக்காக கோவில் கதவை திறப்பதற்காக வந்தார்.

அப்போது கோவில் கதவு உடைத்து அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தன்னார்வ பொறுப்பு தக்கார் ராஜா விற்கு, மாரியப்பன் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com