செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து

செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து கூறினார். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது.
செவிலியருக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. வாழ்த்து
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுகந்தி 2023-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நைட்டிங்கேல் விருது பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளதாவது:-

மருத்துவசேவையில் முழு அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றியமைக்காக விருது பெற்றுள்ள தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுதலையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நாட்டிற்கும், தமிழகத்திற்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளீர்கள். குறிப்பாக பழங்குடியின தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்க செய்து, இறப்பு இல்லாத நிலைக்கு சாதனை புரிந்து பெருமை சேர்த்து உள்ளீர்கள். தங்கள் சேவை இன்னும் உச்சத்தை அடைய வாழ்த்துகிறேன். விருதுநகர் என்ற பெயரிலேயே விருது அடங்கியுள்ளது. இந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com