என் மலர்
விழுப்புரம்
- சொட்டுநீர் குழாய்களை திருடி சென்றது தெரியவந்தது.
- இரும்பு வியாபாரி கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சீதாராமன். இவர் தனது விவசாய நிலத்தில் கடந்த வருடம் சாகுபடிக்கு பயன்படுத்திய சொட்டுநீர் குழாய்களை எடுத்து அவரது இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்து உள்ளார் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீதாராமன் மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த சொட்டுநீர் குழாய்களை எடுக்க சென்றுள்ளார் அப்போது அவர் வைத்திருந்த சுமார் ரூ 50, ஆயிரம் மதிப்புள்ள சொட்டுநீர் குழாய்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாராமன் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை வயது (35) மற்றும் அவரது உறவினர் மாதவன் வயது (34)இவர்கள்தான் சொட்டுநீர் குழாய்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் சீதா ராமன் இவர்கள் மீது மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது விசாரணை நடத்திய போலீசார் சொட்டுநீர் குழாய்களை திருடிய இவர்கள் நடுக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு இரும்பு வியாபாரி கடையில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சின்னதுரை மற்றும் அவரது உறவினர் மாதவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
- குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர்பழனி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நேற்றுநடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 355 மனுக்கள் பெறப்பட்டது அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர கை சைக்கிள் வேண்டி வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு, ரூ.19,500 மதிப்பில் 3 சக்கர கை சைக்கிளை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துணை கலெக்டர்விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்வளர்மதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்தங்கவேலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திண்டிவனம் மாரிசெட்டி குளம் அருகே உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- கைப்பை யில் வைத்திருந்த 5 ஆயிரம் பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஆகிய வற்பறை றித்துச் சென்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரி செட்டி குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரூபசேனா (38) இவர் கடந்த மாதம் 25-ந் தேதி திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு திண்டிவனம் மாரிசெட்டி குளம் அருகே உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தனது இரு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு வீட்டிற்கு உள்ளே செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4, 1/2 பவுன் தங்கச் செயின் மற்றும் அவரது கைப்பை யில் வைத்திருந்த 5 ஆயிரம பணம் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஆகிய வற்பறை றித்துச் சென்றனர். ரூபசேனா கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமை யிலான போலீசார் திண்டி வனம் காலேஜ் ரோட்டில் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்த னர். அப்போது சந்தேகத் துக்கிட மான வந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்ய முற்பட்ட னர். அப்போது இரு சக்கரத்தில் வாகனதில் வந்த 2 பேர் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 25) விஷ்ணு (வயது 19) ஆகியோர் என்பதும் இவர்கள் கடந்த 25-ந்தேதி ரூபாசேனா விடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இவர்களை கைது செய்து இவர்களிடம் இருந்த 3 பவுன் தங்க நகை ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார்.
- 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே திருப்பச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 63). விவசாயி. இவர் அதே கிராமத்தில் உள்ள விளைநிலங்களை பராமறித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் முத்துகிருஷ்ணன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் யாரோ நுழைவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து விவசாயி முத்துகிருஷ்ணன் எழுந்து வந்தார். அப்போது வீட்டிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி முத்துகிருஷ்ணன் கூச்சலிட்டார். நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள் விவசாயியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து, 20 பவுன் நகையை கொள்ளையடித்து விவசாயியை தாக்கிவிட்டு சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ரோஷனை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர்ஸ்டாலின் மற்றும் போலீசார் திண்டிவனம் ரோஷனை ஒலக்கூர் போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
- 60 வயது மதிக்கத்தக்கமுதியவர் இறந்து கிடப்பதாக திண்டிவனம் போலீசருக்கு தகவல் வந்தது.
- போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கருணாவூர் கூட்டு பாதையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்கமுதியவர் இறந்து கிடப்பதாக திண்டிவனம் போலீசருக்கு தகவல் வந்தது .அங்கு சென்று பார்த்தபோது வெள்ளை நிற ஆடைகள், பச்சை கலர் லுங்கி யில் முதியவர் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து இங்கு வீசி சென்று உள்ளார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் முதியவர் உடலை மீட்டு பிரத சோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.
- கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். இவர் நேற்று பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பணி முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரவி ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
- அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
பெங்களூருவில் இருந்து புதுவைக்கு ஆம்னி பஸ் நேற்று மாலை புறப்பட்டது. இந்த பஸ்சினை புதுவை மாநிலம் சண்முகாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் ஓட்டி வந்தார். 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் 2.30 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்னி பஸ், திருவண்ணாமலையில் 3 பயணிகளை இறக்கிவிட்டு புதுவை நோக்கி வந்தது.
இந்த ஆம்னி பஸ் விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே அத்தியூர் திருக்கை சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் வந்தது, அப்போது பஸ்சின் ஸ்டேரிங்கில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் உள்ளிட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் மட்டுமே இருந்ததால், அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திண்டிவனம் அருகே ஓட்டலில் சிலிண்டர், இரும்பு பைப்புகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சாரம் லேபை அருகே திண்டிவனம் ஜக்கா பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் (வயது 36) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடையின் பின்பக்கத்தில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த 2 சிலிண்டர்கள், இரும்பு பைப்புகளை திருடி சென்றனர். இது குறித்து அசோக் கொடுத்த புகாரின் பெயரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெ க்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
அப்போது சாரம் லேபை அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் சாரம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (வயது 54), கலாநிதி (35) ஆகியோர் என்பதும், இருவரும் ஓட்டலில் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சிலிண்டர் மற்றும் இரும்பு பைப்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
- சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திறந்த வெளி கிணறுகள், பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகள் மற்றும் காலாவதியான குவாரிகள் அமைந்துள்ள இடங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களுக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மேற்படி ஆபத்து விளைவிக்கும் நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தாமாகவே முன்வந்து செய்திட வேண்டும்.
திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் உயரம் அதிகமுள்ள தடுப்புச் சுவரினை அமைத்தும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை கடினமான இரும்பு மூடிகள் அமைத்தும், குவாரி பள்ளங்கள் மற்றும் திறந்தவெளி பள்ளங்களை பொருத்த மட்டில் கம்பி வேலி அமைப்புகளை ஏற்படுத்தியும், மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்
அனைத்து அரசு துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட மேற்படி அமைப்புகள் குறித்த பட்டியலினை ஒரு வார காலத்திற்குள் எடுத்து, அவற்றின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையினை 10 தினங்களுக்குள் சமர்பித்திட வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் மற்றும் பள்ளங்களை பொறுத்தமட்டில் தொடர்புடைய அரசு துறையினர் 10 தினங்களுக்குள் சுற்றுச்சுவரின் உயரத்தை அதிகரித்தல் தேவையான இடங்களில் புதியதாக ஏற்படுத்துதல் மற்றும் சாலைகளின் எல்லைகளில் இரும்பு பாதுகாப்பு தகடுகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் அமைப்புகளை ஏற்படுத்துதல், சாலைகளில் தேவையான இடங்களில் கூடுதல் வெள்ளை மற்றும் மஞ்சன் நிற கோடுகள் அமைத்து அதன் அறிக்கையினை 28-ந்தேதிக்குள் சமர்ப்பித்திட வேண்டும். நில உடைமையாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறினால் அவர்களுக்கு எதிராக பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களுக்கு உடந்தையாக இருப்பதாக கருதி சட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
- மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட போலீஸ் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருள் விற்பவர்கள் சம்பந்தமாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள் அடங்கிய சிறிய அட்டையை மாணவர்களுக்கு வழங்கினர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவெண்ணெநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
- உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்லுாரி டீன் கீதாஞ்சலி தலைமை தாங்கி கல்லுாரி மாணவர்கள் போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். துணை முதல்வர் சங்கீதா, மருத்துவ கண்காணிப்பாளர் அறிவழகன், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், துறை தலைவர்கள் ராஜாராம், தமிழ்மணி, ஜானகி, செந்தில்குமாரி, உதவி பேராசிரியர்கள் சீனிவாசன், உதயசூரியன், வெங்கடேஷ்குமார், ரமேஷ், ஸ்ரீராம், நிர்வாக அலுவர் சிங்காரம், கல்லுாரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர்.






