திண்டிவனம் அருகே பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
திண்டிவனம் அருகே பஸ் கண்டக்டர் வீட்டில் 5 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. தனியார் பஸ்சில் கண்டக்டராக உள்ளார். இவர் நேற்று பணிக்கு சென்று விட்டார். இவரது மனைவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பணி முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ரவி ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது. கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com