என் மலர்
திருப்பூர்
- பேருந்து நடத்துநா் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதாக தெரிகிறது.
- இனி வரும் நாட்களில் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டது.
காங்கயம்:
ஈரோட்டில் இருந்து பழனி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பழனி பணிமனை நிா்வாகத்துக்கு உள்பட்ட அந்தப்பேருந்தில் காங்கயம் அருகே பழையகோட்டை பகுதியை சோ்ந்த ரவி என்பவா் ஈரோட்டில் ஏறி, பழையகோட்டைக்கு பயண சீட்டு கேட்டபோது, பேருந்து நடத்துநா் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியதாக தெரிகிறது.
இது குறித்து பழையகோட்டையில் உள்ள தனது நண்பா்களுக்கு ரவி, தகவல் தெரிவித்துள்ளாா். அப்போது, பழையகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்தனா். பின்னா் அரசு உத்தரவிட்டும் பழையகோட்டை நிறுத்தத்தில் ஏன் பேருந்தை நிறுத்த மறுக்கிறீா்கள் என கூறி நடத்துநரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இனி வரும் நாட்களில் பழையகோட்டை நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்லும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது.
- வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தலையில் பலத்த அடிபட்டு வாய்க்காலில் இருந்து மேலே எழுந்து வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
- கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.
- வளர் இளம் பருவத்தினருக்கு டெங்கு விழிப்புணர்வு, புகையிலை விழிப்புணர்வு மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- நல கல்வியாளர் பிரவீன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டி. ராஜலட்சுமி தலைமையில் வளர் இளம் பருவத்தினருக்கு டெங்கு விழிப்புணர்வு, புகையிலை விழிப்புணர்வு மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை ஆகியன பரிசோதனை செய்யப்பட்டு, 96 மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கதிரவன், நல கல்வியாளர் பிரவீன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
- மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
- வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார்
- குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பக்கம் உள்ள ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 27). இவர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இரண்டு பேரும் திருப்பூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம், காளம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை லட்சுமி மறுத்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கவுதம், மண்எண்ணையை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பாலு வழக்கை விசாரணை செய்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேலும் மற்ெறாரு பிரிவில், ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
- 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
- ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
அவிநாசி:
மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
- மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
- அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவிநாசி:
சேவூா் போலீசார் அவிநாசி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த இரு நபா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா்கள், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சோ்ந்த செல்வம் மகன் வினோத்குமாா் (வயது 29), தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ் (27) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளிகளான இவா்கள் தனது நண்பருடன் சோ்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சேவூா் அருகே அ. குரும்பபாளையம் கிரீன் காா்டன் பகுதியில் வசித்து வரும் மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதில்நாகப்பட்டினம் மாவட்டம், வழுவாகுடியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் பிரகாஷுக்கும் (39) தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
- மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர்.
திருப்பூர்:
வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளது.இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் பிரதான சாலைகளான புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மெல்ல, மெல்ல கூட்டம் அதிகமாகி வருகிறது.
மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. நாளை முதல் குமரன் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சீராக வாகனங்கள் செல்லும் வகையில் போலீசார் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போது, பயணிகள் எளிதாக நின்று ஏறும் வகையில், தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் மாநகர போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார், வருவாய்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அதில், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடக்கும் கூட்டங்களில் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பிக்பாக்கெட், நகை பறிப்பு குற்றவாளிகளை கண்டறியும் வகையில் மக்கள் கூடும் இடம், பஸ்களில் மப்டி போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.
- இப்படிப்புகளில் சேர அவகாசம் முடிவுபெறும் நிலையில் வருகிற 31ந்தேதி வரை, சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நவம்பர் 1-ந்தேதி முதல் வகுப்புகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பின் கீழ், பி.ஆர்க்., எம்.ஆர்க்., எனப்படும் கட்டடவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர அவகாசம் முடிவுபெறும் நிலையில் வருகிற 31ந்தேதி வரை, சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி சி.ஓ.ஏ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு, ஐந்தாண்டு பி.ஆர்க்.,2 ஆண்டு எம்.ஆர்க்., படிப்புகளின் சேர்க்கைக்கான இறுதிப்பணிகள் அக்டோபர் 31-ந்தேதிக்குள் முடித்து, நவம்பர் 1-ந்தேதி முதல் வகுப்புகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கான வகுப்புகளை அதிகரிக்கவும், இறுதிகட்ட சேர்க்கை பணிக்கு பின் விபரங்களை சமர்ப்பிக்க, சி.ஓ.ஏ., அறிவுறுத்தியுள்ளது.
- பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும்.
- 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூலனூர்:
மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மூலனூர் வட்டாரத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022-23-ம் ஆண்டுகளுக்கான பெண் விவசாயிகளுக்கு மட்டும் சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடம் ஒன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக செலவினம் ரூ.2 லட்சம் ஆகும். இதற்கான மானியமாக 50 சதவீதமாக ரூ.1லட்சம் வழங்கப்படுகிறது.
பெண் விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த இந்த திட்டம் பயன்பெறும். எனவே இத்திட்டம் தேவையான விவசாயிகள் மட்டும் மூலனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். செல்:- 96777 76214 மற்றும் 97905 26223. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர்.
- நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த 10 முதல், 15 ஆண்டுக்கு மேலான 6 மரங்களை அங்குள்ள சிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதியின்றி, வெட்டினர். இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நில வருவாய் ஆய்வாளர் கோமதி, விசாரணை மேற்கொண்டு, தாசில்தார் மகேஸ்வரனிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்தநிலையில் மரங்களை வெட்டியதற்காக போயம்பாளையம் குருவாயூரப்பன் லே - அவுட் கிழக்கு பகுதியை சேர்ந்த ஏஞ்சல் என்பவருக்கு 4 ஆயிரத்து 572 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு 12 ஆயிரத்து, 544 ரூபாய், குருவாயூரப்பன் நகர் பூங்கா வீதியைச் சேர்ந்த கமலம் என்பவருக்கு 3 ஆயிரத்து, 816 ரூபாய், குருவாயூரப்பன் நகர் வடக்கு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவருக்கு 3 ஆயிரத்து, 560 ரூபாய் அபராதம் விதித்து தாசில்தார் உத்தரவிட்டார்.






