மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடிய 3பேர் கைது

மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடியவர்களை படத்தில் காணலாம். 
மின்வாரிய ஊழியர் வீட்டில் திருடியவர்களை படத்தில் காணலாம். 
Published on

அவிநாசி:

சேவூா் போலீசார் அவிநாசி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த இரு நபா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியை சோ்ந்த செல்வம் மகன் வினோத்குமாா் (வயது 29), தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயன்குறிச்சி பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ் (27) என்பது தெரியவந்தது. கட்டடத் தொழிலாளிகளான இவா்கள் தனது நண்பருடன் சோ்ந்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு சேவூா் அருகே அ. குரும்பபாளையம் கிரீன் காா்டன் பகுதியில் வசித்து வரும் மின்வாரிய பணியாளரான ஜெயபாரதி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதில்நாகப்பட்டினம் மாவட்டம், வழுவாகுடியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் பிரகாஷுக்கும் (39) தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 10 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப்பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com