என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சேர்க்கை நீட்டிப்பு"

    • இப்படிப்புகளில் சேர அவகாசம் முடிவுபெறும் நிலையில் வருகிற 31ந்தேதி வரை, சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நவம்பர் 1-ந்தேதி முதல் வகுப்புகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் அமைப்பின் கீழ், பி.ஆர்க்., எம்.ஆர்க்., எனப்படும் கட்டடவியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர அவகாசம் முடிவுபெறும் நிலையில் வருகிற 31ந்தேதி வரை, சேர்க்கை செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி சி.ஓ.ஏ., அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பு, ஐந்தாண்டு பி.ஆர்க்.,2 ஆண்டு எம்.ஆர்க்., படிப்புகளின் சேர்க்கைக்கான இறுதிப்பணிகள் அக்டோபர் 31-ந்தேதிக்குள் முடித்து, நவம்பர் 1-ந்தேதி முதல் வகுப்புகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுக்கான வகுப்புகளை அதிகரிக்கவும், இறுதிகட்ட சேர்க்கை பணிக்கு பின் விபரங்களை சமர்ப்பிக்க, சி.ஓ.ஏ., அறிவுறுத்தியுள்ளது. 

    ×