search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ.1.50 கோடி செலவில் பெருமாள் கோவில் புனரமைப்பு பணி தொடக்கம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
    X

    புனரமைப்பு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம். 

    வெள்ளகோவிலில் ரூ.1.50 கோடி செலவில் பெருமாள் கோவில் புனரமைப்பு பணி தொடக்கம் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    • மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
    • வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, கருடாழ்வார், விநாயகர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் தரை மட்டத்தில் இருந்து தாழ்வான நிலையில் இருப்பதால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கோவில் கருவறை வரை செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனால் கோவிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவிலை முற்றிலும் அகற்றப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் கோவில் கட்ட பூமி பூஜை மற்றும் கால்கோள் விழா நடைபெற்றது. கோவில் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். இதில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், திருப்பணி குழு தலைவர் ஏ.எம்.சி. செல்வராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் செயல் அலுவலர் எஸ்.ராமநாதன், வெள்ளகோவில் நகர தி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திருப்பணி குழு உறுப்பினர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×