search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meeting program"

    • கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1987 -ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரியில், கல்லூரி சங்கமும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் கல்யாணி, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மணி, வெள்ளியங்கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 33 வருடங்களுக்கு முனனால் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவ-மாணவிகள் சந்தித்து தங்களது கல்லூரி நாட்களில் கடந்த கால நினைவுகளை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். முக்கிய நிகழ்வாக 33 வருடங்களுக்கு முன் பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி, முன்னாள் மாணவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் அரசு கலைக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்பொழுது பல்வேறு காவல்துறை, தீயணைப்பு துறை, ஆசிரியர்கள், கப்பல் மற்றும் விமானத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி நிறைவில் கல்லூரியில் மாணவர்கள் போல மாறி, கல்லூரி நாட்களில் செய்ததைப் போல விசில் அடித்தும், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடியும் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளி படுத்திய சம்பவம் அனைவரையும் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், பல்லடம், பழனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் உட்பட பல்வேறு நண்பர்கள் மூலம் செய்யப்பட்டு இருந்தது.

    • பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்தித்தனர்.
    • அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் 1994-96 வரை படித்த மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இந்நிகழ்வில் புருணை நாட்டில் இருந்து வந்த சுஜாதா, செகந்திரபாத்தில் இருந்து வந்த செந்தில் வடிவு மற்றும் கடலூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 25-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் ஒன்று கூடி, அவர்கள் படித்த வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்து கலந்துரையாடினர்.

    மேலும், அவர்கள் படித்த போது மேற்பார்வையாளராக பணிபுரிந்த வேலமுத்துவை சந்தித்து ஆசி பெற்றனர்.

    பின்னர், குருகுலம் அறங்காவலர் வேதரத்தினத்துடன் குழுப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும், அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    முன்னாள் மாணவிகளுக்கு குருகுலம் அறங்காவலர் வேதரத்தினம் புத்தகம் வழங்கினார்.

    ×