மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அவிநாசி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி:

மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

X

Maalai Malar
www.maalaimalar.com