என் மலர்
திருவாரூர்
- ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
- ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
திருவாரூர்:
திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.
இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.
பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.
ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.
அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.
ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.
- தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.
புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.
திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
- உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியம்.
- மாற்றுத்திறனாளிகள் எழுத்து பூர்வமாக நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை தொடர்ந்து பெற்றிட ஆதார் இணைத்தல் அவசியமாகும்.
ஆண்டிற்கு ஒரு முறை வழங்க வேண்டிய மாற்றுத்திறனாளி உயிருடன் உள்ளார் என்று சம்மந்தப்பட்ட கிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து சான்று பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 6ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 30.12.2022-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க உதவித் தொகையினை தொடர்ந்து பெற்றிடவும் ஆதார் அட்டை எடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் எழுத்துபூர்வமாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்திட வேண்டும்.
மாத உதவித்தொகை பெறுபவர்கள் மட்டுமன்றி அடையாள அட்டை பெறாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தங்களது அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தினைவழங்க வேண்டும்.
- மென்பொருள் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திணை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத்தினைவழங்கிட வேண்டும்.
மறுக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பை உடன் வழங்கிட வேண்டும். மாநகராட்சி நகராட்சியில் நிரந்தர பணியிடங்களை அளித்திடும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமுல்படுத்தி விட வேண்டும்.
அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட் சோரிங் முறைகளை ரத்து செய்து, காலம் முறை ஊதியத்தை உடனடியாக காலியிடங்களை நிரப்பிட வேண்டும்.ஏ மற்றும் பி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம் ஆர் பி செவிலியர்கள், நூலகர்கள், உள்ளிட்டு தொகுப்பூதியம், சிறப்பு காலம் முறை ஊதியம் பெறும் ஊழியர்களை, நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும்.
கருவூலம் உள்ளிட்ட அரசுத் துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பது கைவிட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்ட த்தில் தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின், நன்னிலம் வட்டக்கிளை நிர்வாகிகள், மற்றும்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 192 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை விசாரித்து பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிக்கு ஊன்று கோலினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- கடந்த 23-ம் தேதி நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவரது மனைவி கோமதி (40). இவருக்கு லட்சுமி, ஷாலினி, சிவானி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அங்கு சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதி க்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகி ருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்ட ரிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்வ தாக தெரிவித்தார்.
- பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் முத ற்கட்டமாக 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவே ற்பாளர்களை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டு அவர்க ளுக்கான பணியிடங்களை வழங்கினார்.
இந்த வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவி புரியும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் திருவாரூர் தாலுக்கா, கூத்தாநல்லூர், நன்னிலம், வலங்கைமான், அரித்துவாரமங்கலம், பரவாக்கோட்டை, நீடாம ங்கலம், வடுவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி என 9 போலீஸ் நிலையங்களுக்கு இந்த வரவேற்பாளர்களை நியமனம்
செய்யப்பட்டுள்ளனர்.
- நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருத்துறைப்பூண்டி:
திசையன்விளை அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த இரு பஸ்கள் திருச்செந்தூர், ராமேஸ்வரம் வழியாக திருத்துறைப்பூண்டியை கடந்து வேளாங்கண்ணி செல்வது வழக்கம்.
திருத்துறைப்பூண்டி பகுதி மக்கள் ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய கோவிலுக்கு செல்ல இந்த இரு பஸ்களை தான் நம்பி உள்ளனர்.
அப்படி இருக்கும் வகையில், இந்த பஸ்கள் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்திற்குள் வராமல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர்.
இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இனி இந்த இரு பஸ்களும் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்துக்குள் வரும் என உறுதி அளித்தததன் பேரில் பொதுமக்கள் பஸ்வை விடுவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
- வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வண்டாம்பாளை ஊராட்சியில் திருப்பள்ளி முக்கூடல் கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது.
இந்த கிராமத்தின் வழியே பாய்ந்து ஓடும் வெட்டாறு கரைகளில் உள்ள படுகை ஓரங்களில் ஏராளமான பன்றிகள் முகாமிட்டுள்ளன.
நகரங்களில் பன்றி வளர்ப்பதற்கான ஏதுவான சூழல் இல்லாததால் நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் பன்றி வளர்ப்பவர்கள், தங்களது பன்றிகளை கொண்டு வந்து விட்டுவிடுகின்றனர்.
இப்பன்றிகள் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள நெல் வயல்களில் மேய்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
பன்றிகளுக்கு உணவான கோரை புல் கிழங்குகள் கிடைக்காததால், வயல்வெளிகளில் நுழைந்து நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று சேதப்படுத்துகின்றன.
இதனால் வண்டாம்பாளை, திருப்பள்ளி முக்கூடல், விளாகம் ஆகிய கிராமங்களில் உள்ள நெல் வயல்கள் சேதமாகியுள்ளது.
வயல் ஓரங்களில் சேற்றை நோண்டி, நெல் செடிகளில் உள்ள வேர்களை தின்று விடுகின்றன.
இதனால் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் வீணாகிறது.
உடனடியாக இந்த பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
- நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26-வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான சீனிவாசராவ் படத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் முருகையன் மாலை அணிவித்தார்.
இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்த லைவர் தெட்சிணா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் ஒன்றிய தலைவராக ராஜா, செயலாளராக சிவசந்திரன், பொருளாளராக வேலுக்கன்னு, துணை தலைவர்களாக குஞ்சம்மாள், பாலசுப்ரமணியன், ரவி, துணை செயலாளர்களாக தனிக்கொடி சரவணன், இந்திராணி ஆகியோரும் 35 பேர் கொண்ட ஒன்றிய குழுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களை நீதிமன்றம் உத்தரவை காட்டி அப்புறப்படுத்தும் அரசின் எண்ணத்தை கைவிட வேண்டும். நீர் நிலைகளில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடமும், வீடும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது.
- முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் இருந்ததால் 5-வது வார்டு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
பின்பு, பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது. அப்போது, சாலையின் சில பகுதியும் தோண்டப்பட்டு பள்ளத்தை சுற்றி 'பேரிகார்டுகள்' வைத்து தற்காலிகமாக தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, அதிகமான கடைகள், மீன் மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காணப்படும் ஆசாத்நகர் பகுதியின் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
எனவே, விபத்துகள் ஏற்படும் முன் மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
- பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தம்.
- சிறுமியை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு தரணியா என்ற 12 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சரவணகுமார் பிரிந்து சென்று விட்டார். சுசீலா பாம்பு கடித்து இறந்தார். இதனால் பவித்திரமாணிக்கத்தில் உள்ள பாட்டியான சீதாலட்சுமியுடன் (94) தரணிகா வசித்து வந்தார். ஆனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்ததால் மன அழுத்தத்திற்கு ஆளாகியு ள்ளார்.
இந்நிலையில் இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்கும் முயற்சியினை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரடாச்சேரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் விமலா மற்றும் சுமதி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, பவித்திர மாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, இடைநன்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் காவல்துறை ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்ட குழுவினர் தரண்யாவின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு மனநல ஆலோசனையும் வழங்க ப்பட்டது. பராமரிப்பின்றி குப்பை மேடாக கிடந்த அந்த வீட்டையும் தூய்மைப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தரண்யாவை திருவாரூரில் உள்ள பாத்திமா ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்குள்ள பள்ளியிலேயே படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ஆதரவாக மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர் கலியபெருமாள், உள்ளூர் பிரமுகர்கள் சந்துரு மற்றும் சங்கர் ஆகியோர் இருந்தனர்.
சிறுமி மீட்கப்பட்ட தகவல் அறிந்த பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிக்கு ஆறுதல் கூறி படிப்பதற்கு ஊக்கமளித்தார்.






