என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பருவம் தவறி பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • ஆலத்தம்பாடி வருவாய் சரகம் கச்சனம், கோமல் ஆகிய கிராமங்களில் ஆய்வு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    அதன்படி திருத்துறை ப்பூண்டி தாசில்தார் மலர்கொடி மற்றும் வேளாண்மை உதவி இயக்கு னர் சாமிநாதன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆலத்தம்பாடி வருவாய் சரகம் கச்சனம், கோமல் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது கணக்கெடுப்பு பணியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாராவது விடுபட்டிருந்தால் அவர்கள் தங்களது சாகுபடி விவரங்களை அந்தந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.

    ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் ராணி, வேளாண்மை உதவி அலுவலர் ஜோதி கணேசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கோகிலன், லதா ஆகியோர் இருந்தனர்.

    • நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவச்சந்திரன், ஒன்றிய தலைவர் ராஜா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்து கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்றி நாள் ஒன்றுக்கு ரூ. 600 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்பட்டது.
    • முதியவர்கள் பலர் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் வேலை நிமித்தமாக அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்பட்டது.

    ஆனால், இது நாள் வரை அங்கு பஸ் நிலையம் கட்டவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பலர் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையில் நனைந்தபடியும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் இறந்தால் அருகில் உள்ள மயானத்துக்கு கொண்டு இறுதி சடங்கு செய்வது வழக்கம்.

    இந்நிலையில், அங்குள்ள மயான கொட்டகையின் ஆறு தூண்களும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

    இதனால் மழைகாலங்களில் பிணத்தை எரியூட்டும்போது கொட்டகை இடிந்து விழுந்துவிடுமோ என அச்சத்துடன் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.

    மேலும், அப்பகுதி மக்களுக்கு வேற மயானம் கிடையாது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான கொட்டகையை சீரமைத்து தர வேண்டும் எனவும், மயானத்துக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
    • நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சிவராத்திாியை முன்னிட்டு 10-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இதுதொடா்பான ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலா் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் கவிதா பாண்டியன், வா்த்தக சங்க தலைவா் செந்தில்குமாா், முன்னாள் நகர்மன்ற தலைவா் பாண்டியன், நாட்டியாஞ்சலி விழாக்குழு செயலாளா் ராஜா, தலைவா் செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், பாரதமாதா திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அருண் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நாட்டி யாஞ்சலி விழாக்குழு அமைப்பு செயலாளா் எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவே ற்றார்.

    கூட்டத்தில் நாட்டியா ஞ்சலி விழாவில் கலந்து கொள்ளும் பரதநாட்டிய கலைஞா்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    அண்ணாசிலையில் இருந்து போிக்காடு அமைத்து மேலவீதியில் போக்குவரத்து தடைசெய்து பக்தா்களுக்கும், நடன கலைஞா்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து வாகனங்களையும் வடக்கு, கீழ, தெற்கு வீதி வழியாக போக்குவரத்தை இயக்க வேண்டும்.

    சன்னதி தெருவில் உள்ள கடைகளை சிவராத்திாி அன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு முழுவதும் அடைத்து விழா நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் நாட்டியாஞ்சலி விழாக்குழு பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது.
    • வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட குன்னலூர் ஊராட்சியில், குடிசை தீவில் இருந்து எக்கல், கடம்பவிளாகம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.

    இந்த சாலையானது மேலமருதூர் மெயின் சாலையை இணைக்கும் வழித்தடமாக இருப்பதால், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த வழியாக தான் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், வடபாதி, எக்கல், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி பூமிநாதன் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அத்துமீறி தவறாக நடக்க முயன்றார்.
    • கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை ரஹ்மத் நகரை சேர்ந்த கருப்பணன் மகன் சதீஷ் (வயது26).

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி சாதி பெயரை கூறி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சதீசை கைது செய்தனர்.

    • வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
    • சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சியில் உள்ள நாச்சிகுளம் நகரின் முக்கிய பகுதியாகும்.

    இங்குள்ள தெருக்களில் சமீப காலாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அதிகாலை பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு செல்பவர்கள், கடைக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என அனைவரையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.

    அதேபோல், வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சில நாய்கள் வெறி பிடித்து மாடுகள், ஆடுகளையும் கடித்து வருகிறது.

    இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நாய்களை பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
    • உடலில் கயிற்றை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புங்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 49) இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல் சின்னையன் சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மர பட்டையில் தொங்கி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி சின்னையன் உடலில் கயிறை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சின்னையன் இறந்தார்.இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கீழக்கரை தெற்கு பள்ளியமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் முதல் கால யாகபூஜை ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை, ஹோமாதா பூஜை, கிராம யஜமான சங்கல்பம், ரக்க்ஷனபந்தனம் நடைபெற்று மாலை பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாக பூஜைகள் மற்றும் தீபாராதனை தொடங்கி யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பயிற்சி வகுப்புகள் இந்த மாத பிற்பகுதியில் தொடங்கி மூன்று மாதம் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த 14.3.2022 முதல் 14.6.2022 வரையிலான காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.

    இரண்டாவது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு ந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கப்பட வுள்ளது. அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்படவுள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி விண்ணப்பபடிவங்களை சம்மந்த ப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலிருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவலகங்களிலிருந்தும், மேலும் மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக்கடைகள் ஆகிய இடங்களிலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

    மேற்படி பயிற்சி வகுப்புகள் 2023 பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கடலோர மாவட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையிலுள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவர்.

    தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.மேலும், பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூபாய் ஆயிரம் வீதம், பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

    எனவே, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50சதவிகிதத்திற்கு மேலும் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவிகிதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம்.

    இதனை விண்ணப்பிக்க தற்போது கால அவகாசமாக வரும் (பிப்ரவரி) 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
    • 60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் உலக வங்கி நிதியுதவிதிட்டத்தின் கீழ் நீர்வள நிலவள திட்டத்தின்படி கால்நடை மலடி நீக்கம் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிக்கண்டன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.

    முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, உதவியாளர் மகாலெட்சுமி, பிரசன்னா, மாதவன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட சினைபிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டது.

    மேலும் தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.

    மாடுகளுக்கான மடி வீக்கம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    இந்த முகாமில் தேசிய வேளாண் திட்டமூலம் செயல்படுத்தப்படும் கருசிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் நான்கு முதல் எட்டு மாதம் வரை உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு இவைகளுக்கு காது வெள்ளைகள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    ×