search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    கால்நடை மருத்துவ முகாம்

    • 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.
    • 60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் ஊராட்சி சித்தாளத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் கால்நடைத்துறை சார்பில் உலக வங்கி நிதியுதவிதிட்டத்தின் கீழ் நீர்வள நிலவள திட்டத்தின்படி கால்நடை மலடி நீக்கம் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிக்கண்டன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார்.

    முத்துப்பேட்டை கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையில் ஆய்வாளர் சாந்தி, உதவியாளர் மகாலெட்சுமி, பிரசன்னா, மாதவன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட சினைபிடிக்காத மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டது.

    மேலும் தாது உப்பு கலவை மற்றும் தாது உப்பு கட்டி இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 10 மாடுகளுக்கு சினை ஊசி போடப்பட்டது.

    மாடுகளுக்கான மடி வீக்கம் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    60 கன்றுகளுக்கு குடல் புழு நீக்கம், மருந்து பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    இந்த முகாமில் தேசிய வேளாண் திட்டமூலம் செயல்படுத்தப்படும் கருசிதைவு நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில் நான்கு முதல் எட்டு மாதம் வரை உள்ள கன்றுகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு இவைகளுக்கு காது வெள்ளைகள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×