இளநீர் பறிக்க தென்னை மரம் ஏறிய வியாபாரி சாவு

சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.உடலில் கயிற்றை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மரத்தில் தொங்கிய விவசாயியை கயிறு கட்டி மீட்டனர்.
மரத்தில் தொங்கிய விவசாயியை கயிறு கட்டி மீட்டனர்.
Published on

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புங்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 49) இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல் சின்னையன் சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மர பட்டையில் தொங்கி கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி சின்னையன் உடலில் கயிறை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சின்னையன் இறந்தார்.இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com