என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • இரவு நேர சிறப்பு காவலர் பணி மேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.
    • முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில்களில் இரவு நேர சிறப்பு காவலர் பணிமேற்கொள்ள 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதனை முன்னாள் படைவீரர்களை கொண்டு நிரப்பப்ப டவுள்ளது. இப்பணிக்கு தற்போது ஊதியமாக மாதம் ரூ.8,300- வழங்கப்படுகிறது.

    இதற்கு நல்ல உடல் தகுதியுடன் கூடிய 61 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பி க்கலாம்.

    விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமா கவோ விண்ணப்பி க்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலை பேசி மூல மோ (04366 -290080) தொடர்பு கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூற ப்பட்டு ள்ளது.

    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
    • உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40).

    இவர் மனைவி சாந்தி (38), குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று காலை மனோகரன், மனைவி சாந்தியுடன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    பின்னர், மனோகரன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தகவலறிந்த வலங்கமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு பிரிவு போலீஸ் அறிவழகன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராம ஊராட்சி மேலத்தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த வீராச்சாமி (வயது 53), தெய்வானை (46), பூமிநாதன் (39)ஆகியோருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதுகுறித்து, தகவலறிந்த ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், தொற்று பரவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு, நலக்கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.

    • பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.
    • நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையராக பணியாற்றிவர் குமரிமன்னன். இவர் சரிவர தனது பணிகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வாடகை பாக்கி கேட்டு ஜே.சி.பி. டிரைவர் விஜயராகவன் என்பவர் நகராட்சி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தினார். அப்போது அவர் வாடகை தொகை தர ஆணையர் குமரிமன்னன் லஞ்சம் கேட்பதாக கூறினார். இதையடுத்து அவரை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென தன் உடல் மீது டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தனது பணியை முறையாக செய்யாததாலும், லஞ்சம் கேட்ட புகாரிலும் சிக்கிய ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்தது.

    அதனை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார்.
    • இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர் சென்னையில் ஹார்டு வேர்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அப்துல் காதர் இறந்து விட்டார்.

    இதையடுத்து ஜெய்லானி பீவி கடையை நிர்வகித்ததோடு இல்லாமல் குழந்தைகள் அனைவரையும் நல்லப்படியாக படிக்க வைத்தார். அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்து வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்த்தினார்.

    அவரது ஒரே மகனான அம்ருதீன் ஷேக் தாவூத் பட்டப்படிப்பு முடித்து கொண்டு சென்னையில் தொழிலபதிராக உள்ளார். அவர் உயர்ந்த நிலையை அடைய ஜெய்லானி பீவி செய்த தியாகம் ஏராளம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை அவர் வளர்க்கபட்டபாட்டை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    இதனால் ஜெய்லானி பீவியின் மீது மகன் அம்ருதீன் ஷேக் தாவூத் மற்றும் மகள்கள் அனைவரும் மிகவும் பாசமாக இருந்தனர். மேலும் அரும்பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய காரணத்தினால் அம்ருதீன் தனது தாயின் வழிகாட்டுதலின்படியும் அவரிடம் அனுமதி பெற்றே எந்த ஒரு காரியத்தையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 72 வயதில் ஜெய்லானி பீவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தாய் உயிரிழந்த நாள் முதல் அம்ருதீன் ஷேக் தாவூத் அவரது நினைவலைகளால் தத்தளித்து வந்தார். தாயின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. அப்போது இறந்த தாய்க்கு நினைவு இல்லத்தை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

    அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரை தொடர்பு கொண்டு நினைவுச்சின்னத்தை சொந்த ஊரான அம்மையப்பன் கிராமத்திலேயே தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என்று யோசனை தெரிவித்தார்.

    தொடர்ந்து நினைவு இல்லம் கட்டுமான பணிகள் தொடங்கி வேகமெடுத்தன. ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள் வரவழைக்கப்பட்டு ஏராளமான தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கின. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடங்கிய பணி முடிவடைந்தது. ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் தயாரானது. நினைவு இல்லத்தின் உள்ளே ஜெய்லானி பீவியின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா கடந்த 2-ம் தேதி நடைபெற்று பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு இல்லத்தை எம்மதத்தினரும் வந்து பார்த்துவிட்டு செல்லலாம். 5 வேளை தொழுகை நடத்துபவர்கள் இங்கு தொழுகை நடத்திக் கொள்ளலாம். அதேபோன்று மதரஸா பள்ளியும் இங்கே இயங்கி வருகிறது. இதில் தற்போது 10 மாணவ- மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    மேலும் ஜெய்லானி பீவி அமாவாசைக்கு அடுத்த நாள் உயிரிழந்ததால் அமாவாசை தோறும் 1000 பேருக்கு அம்ருதீன் ஷேக் தாவூது தனது கையால் பிரியாணி சமைத்து அன்னதானம் வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து அமாவாசைக்கு முதல் நாளே அம்மையப்பன் வந்து தனது கையால் பிரியாணி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

    இறந்த தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகனின் செயல் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயத்தில் ஒன்றாக இடம்பிடித்தாலும் தனது தாய்க்காக மகன் கட்டிய தாஜ்மஹால் இவ்வுலகில் காலம் காலமாக பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நினைவு இல்லத்தை ஏராளமானோர் பார்த்து செல்லும் போது இன்னும் தன்னுடன் தாய் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக அம்ருதீன் ஷேக் தாவூத் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • இந்திய அரசு பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
    • 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவ ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழச்சிக்கு டி.டி.பி. ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் விஜயகுமார், செயலாளர் ராஜ் நாராயணன், இணை செயலாளர் மற்றும் ராய் டிரஸ்ட் இண்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன், மாடர்ன் நர்சரி பள்ளி தலைமையாசிரியை தீபா ராணி, டெல்டா ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அபி செல் ஷோரூம் உரிமையாளர் மாணிக்க வாசகம், பயிற்றுநர்கள் பிரபு, கிருபாகரன் மற்றும் அகாடமியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அகாடமியின் நிறுவனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    மவுன அஞ்சலியை அகாடமி செயலாளர் ராஜ் நாராயணன் தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து ராய் டிரஸ்ட் நிறுவனர் துரை ராயப்பன் பேசுகையில்:-

    ரெயில்வே நிர்வாகமும், இந்திய அரசும் பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தி விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

    • குடவாசல் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி பருத்தி ஏலம் நடக்கிறது.
    • கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    திருவாரூர்:

    குடவாசல் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம்.

    குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள அரசூர், மஞ்சக்குடி, புதுக்குடி, சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், இலையூர், செல்லூர், காங்கேயநகரம் ஆகிய கிராமங்களில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த 1 மாதத்திற்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ததால் பருத்தி செடிகள் தொடக்கத்தில் பாதிப்படைந்தது.

    கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது.

    ஆனால் இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திர உதவியுடன் களை வெட்டுதல், மண் அணைத்தல் ஆகிய பணிகளால் கூடுதல் செலவு ஆகியுள்ளது.

    பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை நன்கு உலர வைத்து குடவாசல் அகர ஓகை அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடக்கும் பருத்தி ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யலாம்.

    பிரதி வாரம் புதன்கிழமை தோறும் எந்த ஒரு இடைத்தரகர்களும் இன்றி பருத்தி ஏலம் நடைபெறுகிறது.

    இந்த ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்துள்ள பருத்தியை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.

    நிரந்தர பதிவு எண் ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து நிரந்தர பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.
    • 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 240 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளு மாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு இலவச சலவை பெட்டியினையும் மற்றும் திட கழிவு மேலாண்மையில் சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கும், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்குபெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழினையும், உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு பசுமை சாம்பியின் விருதினை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் உலக சுற்றுச்சுழல் தினத்தினை முன்னிட்டு உலக சுற்றுச்சுழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்துதுறை அரசு அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.

    இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மஹா காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது. இதனையடுத்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் சிறப்பு அபிசேகம் ஆராதனைகள் நடந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பின்னர் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் நடைபெற்று.

    தொடர்ந்து கரகம் எடுத்தல், அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனையும் சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்து அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் மாவுக்கு போடுதல் அர்ச்சனை சிறப்பு அபிசேகம், அன்னதானம் நடைபெற்றது.

    இரவும் கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது

    . இதில் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்துக் கொண்டனர்.

    • ரங்கோலி போட்டி மன்னார்குடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் ஜி-20 கல்விப் பணிக்குழு வின் பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் ஒருபகுதியாக ரங்கோலி போட்டி மன்னார்குடியில் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கௌசல்யா தலைமையில் நடைபெற்றது.

    திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார்.

    மகாதேவபட்டினம் ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசு வழங்கி பாராட்டி னார்.

    நிகழ்ச்சியில் அலு வலர்கள் திருலோகச்சந்தர் , கனகதுர்க்கா , மனோஜ் , பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
    • கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவாரூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி (வயது 30), சௌடோ மஜி (27). இவர்கள் தஞ்சாவூரில் தங்கியிருந்து அதே பகுதியில் மாதா கோயிலில் உள்ள மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும் சௌடோமஜிக்கு திருமணமாகி 1 குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை கலையரசன் என்பவர் ஓட்டினார். மேற்பார்வையாளராக மணிகண்டன் இருந்தார். இவர் லாரியின் உள்ளே அமர்ந்து இருந்தார். நோபோ மஜி, சௌடோ மஜி ஆகியோர் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் லாரி இன்று அதிகாலை திருவாரூர் அருகே மேப்பலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஒட்டக்குடி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் மேலே அமர்ந்து வந்த நோபோ மஜி மற்றும் சௌடோமஜி ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • ரூ.57,927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
    • உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதை ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ வயல்வெளி ஆய்வு மேற்கொ ண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மழவராயநல்லூர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு ள்ளதையும், நெடுவாக்கோ ட்டை பகுதியில் விதைப்பண்ணை வயல் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் (வல்லுநர் விதை) பயிரிடப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், முக்குளம் சாத்தனூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.57927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க ப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், செருமங்கலம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் குறுவை 2023-24 திட்டத்தின் கீழ் 20 சென்ட் பரப்பளவில் (திருப்பதி சாரம் 5 ரகம்) எந்திர நடவு பாய் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருவதையும், எடகீழையூர் பகுதியில் உளுந்து விதைப் பண்ணை வயல் 2023-24 திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் (வம்பன் 10) பயிரிடப்பட்டுள்ளதையும், உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மன்னார்குடி வட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாய், பண்ணைக்கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், ஒரு பயனாளிக்கு உழவு செய்யும் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    ஆய்வின்போது, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை ரேணுகாந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தாசில்தார் கார்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் (மன்னார்குடி) இளம்பூரணார், விஜயகுமார் (நீடாமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×