என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் அதிலிருந்து செல்லும் நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசா கருப்பூர், மூலமங்கலம்,

    ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம்,

    வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிக்கு உரிமம் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியார் இ சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முனனுரிமை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பெருக்கி கொள்ள உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் இ-சேவை மையம் உரிமம் இயக்குவதற்கு வழங்கப்படவுள்ளது.

    அரசு விதிகளின்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் ; https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in. என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது.

    விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திற னாளி ஆப்ரேட்டர்கள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணிணியில் நல்ல அறிவும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்கவேண்டும்.

    இ-சேவை மைய கட்டிடம் 100 சதுர மீட்டருக்குள் இருக்கவும், மையத்தில் கணிணி, பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருத்தல் அவசியமாகும்.

    குறைந்த பட்சம் 2 எம்பிபிஎஸ் அலைவரி சையுடன் தொடர்ச்சியான மற்றும் தடையற்ற இணைய இணைப்பை உறுதி செய்யவேண்டும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிர்வு முறையின் விதிகளின்படி இயக்குதல் வேண்டும் என தகுதிகளாக தெரிவிக்கப்ப டுகிறது.

    தேர்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்று த்திறனாளி ஆபரேட்டர்க ளுக்கு ஐனு எண் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    படித்த கணிணி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் இ-சேவை மையம் வைத்து வருமானம் ஈட்டிக்கொள்ள https://tnesevai.in.gov.in மற்றும் http://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவன் இறந்து 4 மணி நேரத்தில் மனைவி திடீரென்று இறந்தார்.
    • கணவன் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவனுக்கும் தெரியவில்லை.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை திமிலத்தெரு பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம்(வயது 60).

    இவரது மனைவி மும்தாஜ்(59).

    இருவரும் எல்லாவற்றையிலும் விட்டுக்கொடுக்காத தம்பதியாக ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் மும்தாஜ் வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மும்தாஜ்க்கு மருந்து வாங்க அப்துல் சலீம் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று மதியம் பட்டுக்கோட்டைக்கு சென்றார்.

    போகும் வழியில் அப்துல் சலீம் மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து அப்துல் சலீமின் உடலை முத்துப்பேட்டைக்கு கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்திருந்தனர்.

    நோய்வாய்ப்பட்ட மனைவி மும்தாஜ் அருகில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்தார்.

    இவருக்கு அதர்ச்சி கொடுக்க கூடாது என்பதற்காக இவரிடம் குடும்பத்தினர் கணவர் இறந்த செய்தியை கூறாமல் இருந்துள்ளனர்.

    இந்தநிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4மணிநேரம் கழித்து நேற்றிரவு மனைவி மும்தாஜும் திடீரென்று இறந்தார்.

    ஏற்கனவே கணவர் இறந்த அதர்ச்சியில் இறந்த சம்பவத்தால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்த நிலையில் மனைவியும் திடீரென்று இறந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்தநிலையில் கணவர் இறந்தது மனைவிக்கும் மனைவி இறந்தது கணவருக்கும் தெரியாமல் போன நிலையில், தம்பதி சாவிலும் இணைபி ரியாத இச்சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
    • ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா பிகேடி நர்சிங் ஹோமில் 'உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ராய்டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்திருந்தது.

    இதில் ஆக்சிஸ் வங்கி திருத்துறைப்பூண்டி கிளை, பி. கே. டி. நர்சிங் ஹோம், த.மு.மு.க திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியம், தமிழ்நாடு குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் நல சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருத்து றைப்பூண்டி கிளை, திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம், தமிழக அமைப்பு சாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற் சங்கம் மற்றும் கிங்ஸ் இன்டிரியர் வுட் வோர்க்ஸ் முத்துப்பேட்டை போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    நகர்மன்ற செயலாளர் கவிதா பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருத்துறைப்பூண்டி ஆக்சிஸ் வங்கி மேலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன் , திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீமான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    த.மு.மு.க ஒன்றிய செயலாளர் அன்சாரி, நகர தலைவர் இக்பால்ராஜா , நகர செயலாளர் நிஜாம், நகர பொருளர் முகமது யூசுப், நகர இளைஞரணி செயலாளர் பைசல், கடியாச்சேரி உறுப்பினர்கள் சாதிக் அலி மற்றும் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    அம்மாலு, அனுசியா தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி ஊழியர்கள் 7 பேர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

    முடிவில் மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் செய்யது யூசுப் நன்றி கூறினார்.

    • எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
    • அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    ரெயில் நிலையங்களில் ரெயில்கள் வரும்போது இருக்கையில் அமர வேண்டி பயணிகள் அவசர, அவசரமாக முண்டியடித்து பெட்டிகளில் ஏற முயலும் போது சில சமயங்களில் தண்டவாளத்தில் விழுந்து தனக்கு ஆபத்தை விளை வித்து கொள்கின்றனர்.

    இது போன்ற சம்பவம் தற்போது திருவாருரில் நடந்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் குருவாடி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து மகன் வெங்கடேஷன் (வயது 20).

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் சென்னைக்கு செல்வதற்காக தனது ஊரிலிருந்து திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    மன்னார்குடியில் இருந்து சென்னை வழியாக வெளிமாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயிலில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ரெயிலானது திருவாரூர் ரெயில் நிலையத்தில் நடைமேடையில் வரும் போது, பொது பெட்டியில் ஏறுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை வெளியில் இழுத்துள்ளனர்.

    இதில் அவர் கணுக்கால் துண்டாகியது.

    இதில் வலியால் துடித்த அவரை பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும்.
    • பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் அருகே ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் ஒன்றியக்குழு கூட்டம் விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலிய பெருமான் தலை மையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர், செந்தில்குமார் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கத்தின் செயலாளர் சின்னராஜா கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் வலங்கை மான் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் தமிழ்நாடு விவசாய கிராம சங்கம் அமைக்க வேண்டும், பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பூசாந்திரம், ராஜேஷ்கண்ணா மோகன், மாலா, கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
    • இதில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 242 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்தர் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கபடுவதாக தகவல் வந்தது.
    • கூத்தாநல்லூரில் போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

    திருவாரூர்:

    தமிழக அரசு அனுமதியின்றி மது விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள், கஞ்சா விற்க படுவதாகவும் ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது.

    இதைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் போலீசார் நேற்று கூத்தாநல்லூர், மரக்கடை, கோரையாறு, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த சித்தாம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த காளிதாஸ் (வயது42), கோரையாறு அகமலாங்கரையை சேர்ந்த முருகதாஸ் (41), சுரேஷ் (43), சித்தாம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கண்ணையன் (52), மரக்கடை, கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    அதேபோல் கஞ்சா விற்பனை செய்த கூத்தாநல்லூர் முகமதியா தெருவை சேர்ந்த சாகுல் அமீது (21) என்பவரை கைது செய்தனர்.

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும்.
    • ஆசாத் நகர் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை வர்த்தக கழக மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசகர்கள் ராஜாராமன், மாணிக்கம், மெட்ரோ மாலிக், அந்தோணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக துணை தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் வர்த்தகர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சாலையை இரண்டாக பிரித்து பேரிகார்டு அமைத்து தர வேண்டும், ஆசாத் நகர் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து, முத்துப்பேட்டையில் சமீபத்தில் நகை கொள்ளை யில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் துணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, சபான், செயற்குழு உறுப்பினர்கள் ஹைதர் அலி, சகாப்தீன் நூருல் அமீன், தியாகு, நவாஸ்கான், திருவள்ளுவன், சாமிநாதன், இளங்கோ கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி பழனி சங்கர் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கிஷோர் நன்றி கூறினார்.

    • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெரம்பூர், கானூர், சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம்,

    பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்தார்.

    • நாகூர் தர்காவில் கந்தூரி விழா வருகிற 19-ந் முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும், காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கும் சென்றடைகிறது.

    திருவாரூர்:

    நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வரும் சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகிய மூன்றும் மும்மாதத்திற்கான ஆன்மீக தளம் மட்டுமன்றி சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்த சிங்காரவேலர் கோயில் வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகியவகைகளில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது வழக்கத்திற்கு மாறாக கூடுதலான அளவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும்.

    இது போன்று நடைபெறும் திருவிழாக்களின் போது சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதனையொட்டி நாகூர் தர்கா(சின்ன ஆண்டகை) கந்தூரி விழாவானது வரும் 19-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவானது 21-ம் ேததி இரவு நடைபெறுவதையொட்டி அந்த விழாவில் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் வகையில் 21-ம் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயிலானது புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும் மற்றும் காரைக்காலுக்கு மாலை 3.50 மணி அளவிலும் சென்றடைகிறது.

    இதே ரயிலானது மீண்டும் 22-ம் ேததி காலை 6.00 மணியளவில் காரைக்காலில் இருந்து புறப்படும் மதியம் 1.30 மணி அளவில் தாம்பரத்தை சென்றடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உழவர் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள ஒரு முக்கிய செயலி 'உழவன்'. இதில் தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருள்களை எந்த ஒரு தடையும் இன்றி அனைவரும் பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு இடுபொருள் முன்பதிவு, பயிர் மகசூல் இழப்பினை தடுத்திடும் பொருட்டு பயிர் காப்பீட்டு விபரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் தங்கள் கைப்பேசியிலேயே எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக உரங்கள் இருப்பு நிலை, மேலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள் அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கல் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா? இல்லையா? அவற்றின் விலை என்ன என்று இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள உதவுகிறது.மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண்ணுடன் கூடிய விதை இருப்பு நிலை, மேலும் விவசாயிகளுக்கு உதவிடும் பொருட்டு குறைந்த விலையில் வாடகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் இயந்திரங்கள் , பல்வேறு விலைப்பொருட்கள் மாநிலம் முழுவதுமுள்ள சந்தைகள் விலை விபரம் தெரிந்து கொள்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கான உண்மை விலை விபரங்களை எளிதில் அறிந்து கொண்டு இடை தரகர்களிடம் ஏமாறாமல் இருக்க உதவும். தமிழகம் முழுவதும் உள்ள அணை நீர்மட்டம், தற்போது உள்ள சூழலுக்கு ஏற்ற பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அளிக்கும் வேளாண் செய்திகள், விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உதவிடும் வேளாண் கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை அனைத்து பயிர்களுக்கும் படம் பார்த்து பரிந்துரை வழங்கும் பகுதி, பயிற்சி பெற முன்பதிவு செய்திடவும் உதவிடும் அட்மா பயிற்சி மற்றும் செயல் விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள் விலை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உழவன் செயலி மூலம் கிடைக்கும்.

    இந்த உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய விவசாயிகள் தங்களது செல்போனில் கூகுளில் ப்ளே ஸ்டோர் சென்று உழவன் என தட்டச்சு செய்து ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுவதால் இந்த வாய்ப்பினை அனைவரும் தவறாது பயன்படுத்திட வேண்டும்.

    ×