என் மலர்
நீங்கள் தேடியது "மது பானங்கள்"
- கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கபடுவதாக தகவல் வந்தது.
- கூத்தாநல்லூரில் போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர்:
தமிழக அரசு அனுமதியின்றி மது விற்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள், கஞ்சா விற்க படுவதாகவும் ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து கூத்தாநல்லூர் போலீசார் நேற்று கூத்தாநல்லூர், மரக்கடை, கோரையாறு, சித்தாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்பனை செய்த சித்தாம்பூர் தெற்கு தெருவை சேர்ந்த காளிதாஸ் (வயது42), கோரையாறு அகமலாங்கரையை சேர்ந்த முருகதாஸ் (41), சுரேஷ் (43), சித்தாம்பூர் மேலத்தெருவை சேர்ந்த கண்ணையன் (52), மரக்கடை, கீழத்தெருவை சேர்ந்த நாகூரான் (55) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அதேபோல் கஞ்சா விற்பனை செய்த கூத்தாநல்லூர் முகமதியா தெருவை சேர்ந்த சாகுல் அமீது (21) என்பவரை கைது செய்தனர்.






