search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் இருந்து நாகூருக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கம்
    X

    சென்னையில் இருந்து நாகூருக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கம்

    • நாகூர் தர்காவில் கந்தூரி விழா வருகிற 19-ந் முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும், காரைக்காலுக்கு மாலை 3.50 மணிக்கும் சென்றடைகிறது.

    திருவாரூர்:

    நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வரும் சிக்கல் சிங்காரவேலர் கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகிய மூன்றும் மும்மாதத்திற்கான ஆன்மீக தளம் மட்டுமன்றி சுற்றுலா தளமாகவும் இருந்து வருகிறது.

    இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடாகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் இந்த சிங்காரவேலர் கோயில் வேளாங்கண்ணி மாதா கோயில் மற்றும் நாகூர் தர்கா ஆகியவகைகளில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது வழக்கத்திற்கு மாறாக கூடுதலான அளவில் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கமாகும்.

    இது போன்று நடைபெறும் திருவிழாக்களின் போது சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இதனையொட்டி நாகூர் தர்கா(சின்ன ஆண்டகை) கந்தூரி விழாவானது வரும் 19-ம் தேதி துவங்கி 21-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் முக்கிய விழாவானது 21-ம் ேததி இரவு நடைபெறுவதையொட்டி அந்த விழாவில் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்ளும் வகையில் 21-ம் தேதி காலை 8.15 மணி அளவில் சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயிலானது புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் வழியாக நாகூருக்கு மாலை 3.30 மணிக்கும் மற்றும் காரைக்காலுக்கு மாலை 3.50 மணி அளவிலும் சென்றடைகிறது.

    இதே ரயிலானது மீண்டும் 22-ம் ேததி காலை 6.00 மணியளவில் காரைக்காலில் இருந்து புறப்படும் மதியம் 1.30 மணி அளவில் தாம்பரத்தை சென்றடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×