என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டையில் வர்த்தக கழக செயற்குழு கூட்டம் நடந்தது.
முத்துப்பேட்டையில், வர்த்தக கழக செயற்குழு கூட்டம்
- போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும்.
- ஆசாத் நகர் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வர்த்தக கழக மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசகர்கள் ராஜாராமன், மாணிக்கம், மெட்ரோ மாலிக், அந்தோணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக துணை தலைவர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இதில் வர்த்தகர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய திருத்துறைப்பூண்டி மற்றும் பட்டுக்கோட்டை பஸ்கள் நிறுத்தும் இடத்தில் சாலையை இரண்டாக பிரித்து பேரிகார்டு அமைத்து தர வேண்டும், ஆசாத் நகர் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து, முத்துப்பேட்டையில் சமீபத்தில் நகை கொள்ளை யில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இதில் துணை செயலாளர் ராஜேஷ் கண்ணா, சபான், செயற்குழு உறுப்பினர்கள் ஹைதர் அலி, சகாப்தீன் நூருல் அமீன், தியாகு, நவாஸ்கான், திருவள்ளுவன், சாமிநாதன், இளங்கோ கோவிந்தராஜ், புண்ணியமூர்த்தி பழனி சங்கர் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கிஷோர் நன்றி கூறினார்.






