என் மலர்
திருநெல்வேலி
- காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
- மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நெல்லை:
விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு, சாலை விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நி லைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்து பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். செயற்கை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்க ப்பட்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செய்து காண்பித்து செயல் முறை விளக்கத்து டன் பயிற்சி யளித்தனர்.
பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவ ர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.
பயிற்சியில் மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
- உணவு மற்றும் குடிநீருக்காக கரடி கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.
- கோவிலின் அருகே கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு வனப்பகுதியில் இருந்து வெளிவந்த கரடி மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், பெருமாள்குளம் அருகே உள்ள பொத்தைகளில் தஞ்சமடைந்து உணவு மற்றும் குடிநீருக்காக கிராமத்திற்குள் புகுந்து வருகிறது.
கடந்த 2-ந் தேதி அதிகாலை அங்குள்ள இசக்கியம்மன் கோவிலில் கரடி உலா வந்த காட்சிகள் சி.சி.டி.வியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஊருக்குள் சுற்றி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து களக்காடு வனத்துறையினர் கரடி நடமாட்டம் காணப்படும் பெருமாள்குளத்தில் ஆய்வு செய்தனர். அங்கு பதிந்திருந்த கரடியின் கால்தடங்களையும் சோதனையிட்டனர். அதன்பின் கோவிலின் அருகே கரடியை உயிருடன் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டுக்குள் கரடி விரும்பி உண்ணும், அன்னாசி பழங்கள் வைத்து வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். பழத்தை உண்ப தற்காக கரடி வரும் போது கூண்டுக்குள் சிக்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கூட்டத்தில் மீனவர்கள், மீனவ அமைப்புகள் கலந்து கொண்டு மனுக்களை நேரில் வழங்கலாம்.
- கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ராதாபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 11-ந் தேதி காலை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தே வைகள் அடங்கிய மனுக்களை மீனவர்கள், மீனவ அமை ப்புகள் கலந்து கொண்டு நேரில் வழங்கலாம்.
மேலும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர் களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரி விக்கப்படும்.
எனவே கோரிக்கைகள் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்ட த்தில் கலந்து கொண்டு மனுக்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முகமது சமீர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
- விசாரணையில் மோட்டார் சைக்கிளை ராஜேஷ்ராம் திருடியது தெரியவந்தது.
நெல்லை:
பேட்டையை சேர்ந்தவர் முகமது சமீர் (வயது20). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது மோட்டார் சைக்கிளை நெல்லையில் தங்கியிருந்து வேலை பார்த்துவரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்ராம் (30) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- உற்சவ பெருமாள் பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி அருள் பாலித்து வந்தார்.
- பெருமாளுக்கு பழ வகைகள் சமர்பணம் செய்து பூஜை நடை பெற்றது.
ஏர்வாடி:
பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் 57-வது திவ்விய தேசமாக குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் இருந்து வருகிறது. நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள் சுந்தரேச பரிபூர்ண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோ விலில் கோடை உத்சவ விழா நடை பெற்று வந்தது. தாயாரு டன் உற்சவ பெருமாள் பட்டு பீதாம்பரம் இல்லாமல் மிக எளிய பருத்தி ஆடை வஸ்திரம் உடுத்தி தினமும் அருள் பாலித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெருமாள் தாயா ருடன் குலசேகர மண்ட பத்தில் எழுந்தருளினார். திருக்கு றுங்குடி ஜீயர் சுவாமிகள் பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்தார். அதன் பின்பு பல்வேறு பழ வகைகள், நெய்வேத்தி யங்கள் பெருமாளுக்கு சமர்பணம் செய்து அர்ச்சகரால் அலங்கார பூஜை நடை பெற்றது. அதன் பின்னர் தோளுக்கு இனியன் பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோடை கால வசந்த உத்சவம் சிற ப்பான முறையில் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவின் கைங்கே ரியம் மற்றும் மங்கள செல விளங்கள் ஊர் பொது மக்கள் சார்பாக நடை பெற்றது.
- மாநாட்டில் பங்கேற்க வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
- டவுன் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
வணிகர் தினத்தை யொட்டி இன்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர்.
இதனையொட்டி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்கும்படியும், மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் வணிகர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
நெல்லை டவுன் ரதவீதியை சுற்றிலும் அமைந்துள்ள கடைகளில் பெரும்பா லானவை அடைக்கப்பட்டு இருந்தது. டவுன் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பாளை மார்க்கெட் பகுதிகளிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியா பாரிகள் பெரும்பாலானோர் கடை களை அடைத்திருந்த னர். இதனால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
மாநகரில் பேக்கரி, பலசரக்கு, ஹார்டுவேர்ஸ் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம்போல் இயங்கியது.
களக்காட்டில் புதிய பஸ் நிலையம், அண்ணாசாலை, பழைய பஸ் நிலையம், சேரன்மகாதேவி சாலை, கோவில்பத்து பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் அம்பை, வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, மானூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதி களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
- மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற மன்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனால் மக்களுக்கு தேவை யான திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்ட தாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சியை கலைக்க கோரி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காதே. நெல்லை மாநகராட்சியை கலைத்திடு என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தின் அருகிலும், மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
- தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- குற்றம் செய்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக எழுந்த புகாரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரில் ஆஜராக சம்மன்
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரான அம்பை அருகே அடைய கருங்குளத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரின் தரப்பினர் இன்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று அருண்குமாரின் சகோதரர், அவரது தாயார் ராஜேஸ்வரி, தந்தை கண்ணன் ஆகியோர் தங்களது தரப்பு வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவருடன் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களை அறிக்கையாக கொண்டு வந்து அதிகாரி களிடம் ஒப்படைத்தனர். மேற்கொண்டு விசாரணைக்கு ஆஜராகாமல் எழுந்து வெளியே வந்து விட்டனர்.
தொடர்ந்து அருண்குமார் தரப்பு வழக்கறிஞர் பாண்டிய ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றம் செய்யப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார். பாதிக்கப் பட்டவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலோடு இருந்து வருகிறார்கள்.
பெங்களூரில் வேலை பார்க்கும் பாதிக்கப்பட்ட நபருக்கு 5-ந் தேதி ஆஜராக 3-ந்தேதி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் நிலையில் அவருடைய நிலையிலிருந்து மேல் அதிகாரியாக இருக்கும் ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி.யை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். டி.எஸ்.பி தலைமையில் விசாரணை என்பது சரியானதாக இருக்காது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் உண்மை நிலை வெளிவரும். சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னர் தான் உண்மை சம்பவங்கள் வெளியே வந்தது. கைது நடவடிக்கை இருந்தால் தான் துணிச்சலுடன் வெளிவந்து தானாக முன்வந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சாட்சியம் அளிப்பார்கள். இந்த விசா ரணையை மேற்பார்வை செய்ய உயர் அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும்.
நீதித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு இந்த வழக்கில் ஆதரவாக செயல்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முத்தூர் ஊராட்சியில்கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
- ரெட்டியார்பட்டி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆலோசனை
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அனைத்து திட்டப்பணி களும் காலதாமதமின்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்தி ற்குள் தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக இன்று பாளை யூனியன் முத்தூர் ஊராட்சியில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளையும், ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.
தொடக்கப்பள்ளி கட்டுமானப்பணி
பின்னர் முத்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொடியன்குளத்தில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்து, வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து ரெட்டியார்பட்டி மேம்ப டுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பார்வையிட்டார். மருந்துகள் சேமிப்பு அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்கும் அறை, எக்ஸ்ரே எடுக்கும் அறை போன்ற அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரெட்டியார்பட்டி குளத்தினையும் பார்வையிட்டு குளத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டி தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்றது
- மாணவி அபிநயா 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
நெல்லை:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தில் நடைபெற்ற 5 -வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி அபிநயா 11.82 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் மற்றும் 4X100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்க பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், பள்ளி ஒருங்கிணை ப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் சேது, நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலர் லெட்சுமணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற போலீசார் முயற்சி செய்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் டி.எஸ்.பி. ராஜு பேச்சுவார்த்தை நடத்தினார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தி னருக்கு பாத்தியப்பட்ட சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கொடைவிழா வருகிற 8-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதையொட்டி விழா கமிட்டினர் சார்பில் சிறும ளஞ்சி மெயின் ரோட்டில் அலங்கார விளக்கு ஆர்ச் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நேற்று இரவில் அலங்கார ஆர்ச்சை அகற்ற முயற்சி செய்தனர்.
இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ச்சை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று ஆர்ச் வைக்குமாறு போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
- ரிஷி ஆச்சார்யா குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
- நள்ளிரவில் ரிஷி ஆச்சார்யாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை-சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ள சாஸ்திரிநகரை சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவரது மகன் ரிஷி ஆச்சார்யா (வயது 20). இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
ரிஷி ஆச்சார்யா சாஸ்திரிநகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் உறவினர்களுடன் அமர்ந்து ரிஷி தோசை சாப்பிட்டுள்ளார்.
பின்னர் தூங்க சென்ற அவருக்கு நள்ளிரவில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இன்று அதிகாலையில் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






