என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • கிருஷ்ணகுமாருக்கும் , அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ், தினேஷ் ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தாக்கினர்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ் (25), தினேஷ் (23) ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக உவரி போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து அண்ணன் ,தம்பியை வலைவீசி தேடி வருகிறார்.

    • கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர்.
    • அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    நெல்லை:

    கூடங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தனர். அப்போது அங்கு சென்ற நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தர்ராஜன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

    இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய பொருளாளர் துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுரேஷ்குமார், முடவன் குளம் சுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி, ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பாம்பே செல்வகுமார், இன்பம், வினேஸ்ராஜா மற்றும் கபடி பயிற்சியாளர்கள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார்.
    • மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    சி.பி.எஸ்.இ. ெபாதுத் தேர்வில் திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் கலந்துகொண்டு சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசுகளையும், கேடயங்களையும் வழங்கினார். மேலும் பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மாணவர்களின் கற்றல் மேம்பாட்டிற்காக காலை, மாலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • தாமஸ்க்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ளது.
    • பங்கில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு அலுவலகத்தில் இருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றார்.

    நெல்லை:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்டோபர் காலனியை சேர்ந்தவர் ஜோசி தாமஸ்(வயது 32). இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் உள்ளது. இந்த பங்கில் நேற்று புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு அலுவலகத்தில் இருந்த ரூ.16 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை திருடிச்சென்றார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    நெல்லை

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 60) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவில் 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் தேவராஜை பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றியது. பின்னர் அவரை மிரட்டிவிட்டு கடையின் ஷட்டர் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்றது. அங்கிருந்த விலை உயர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து காவலாளி தேவராஜ் பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கடந்த மாதம் 15-ந்தேதி இதே கடையில் காவலாளியை மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் நான்கு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் ஏற்றி சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை துப்பு துலங்கவில்லை.

    இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கன்குளத்தில் கடந்த வாரம் இதேபோல் டாஸ்மாக் கடையை உடைத்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்மநபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

    இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    • திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.
    • பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு கைலாச புரத்தில் அமைந்திருக்கும் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்த ஆண்டு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான கொடியேற்றம் அதிகாலையில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமி கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் செப்பு கேடயத்தில் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து கொடி பட்டத்துடன் சுவாமி- அம்பாள் வீதி உலாவும், பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு வகையான சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 28-ந்தேதியும், அதற்கு மறுநாள் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. கொடியேற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    நெல்லை:

    கள்ளச்சாராயத்தை கண்டுகொள்ளாமல் தி.மு.க. அரசு மெத்தன போக்காக செயல்படுவதாக கூறி தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி தலைவர் ஜெய சித்ரா தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் கார்த்தீஸ்வரி வரவேற்றார். மகளிரணி தலைவர் தட்சணா கண்டன உரையா ற்றினார். வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொதுச் செயலா ளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவே சம், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்க டாஜலபதி, மேகநாதன், பொருளாளர் சக்சஸ் சுந்தர், மண்டல தலைவர்கள் குருகண்ணன், பெரியதுரை, இளைஞரணி துணை தலைவர் ஜெட் ராஜா, வக்கீல் சிவசூரிய நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • நெல்லையில் நேற்று ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
    • மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் உக்கிரம் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு அனல் பறக்கிறது.

    திடீர் மழை

    இந்நிலையில் நேற்றும் பகல் முழுவதும் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலு டன் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக மாநகரில் தச்சநல்லூர் பகுதியில் கனமழை பெய்தது. அங்கு பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    மின்தடை

    தச்சநல்லூர் பகுதியில் மின்தடையால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. அங்கு சில இடங்களில் இன்று அதிகாலை வரை மின்வினியோகம் இல்லை. எனினும் மின் ஊழியர்கள் விடிய, விடிய பணி செய்து மின் வினியோகத்திற்கு வழிவகை செய்தனர். பேட்டையில் இடி-மின்ன லால் முதியவர் பலியானார்.

    மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு அதிகபட்சமாக 32.20 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கன்னடி யன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நெல்லையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. அங்கு 2.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் திடீர் மழை பெய்தது. காக்காச்சி முக்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 64 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 48 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    • ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நெல்லையில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன், பொரு ளாளர் ராஜா முகம்மது, முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவித பதவி உயர்வும் இன்றி தவிக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் மூதுரிமையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    இந்த வகையில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே அரசு இவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதில் நிர்வாகிகள் சங்கர நாராயணன், ராமநாதன், குருவிநாயகம், இந்துமதி, மகாராசி, செண்பகலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
    • மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்தாண்டு 249 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவர் பாலகிஷன் 493 மதிப்பெண் பெற்று 2-வது இடம் பெற்றுள்ளார். மாணவிகள் அகஸ்தியா, பாலசவுமியா ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று 3-வது இடம்பெற்று பள்ளியில் சாதனை படைத்தனர்.

    மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும், 450-க்கு மேல் 59 மாணவர்களும், 400-க்கு மேல் 118 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெஸ்மின் பிரித்தி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.
    • மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட உளவுத்துறை இன்ஸ்பெக்டராக கோமதி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வர்களின் பற்களை உடைத்ததாக எழுந்த புகாரையடுத்து போலீசார் இடமாற்றம் செய்ய ப்பட்டனர்.

    அதில் இன்ஸ்பெக்டர் கோமதியும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அதிசய ராஜ், கூடுதல் பொறுப்பாக மாவட்ட உளவுத்துறையை கவனித்து வந்தார்.

    இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அதிசயராஜ் மாவட்ட உளவுத்துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக வெங்கடேஷ் செல்வம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் கியூ பிரிவில் பணியாற்றி யவர். திண்டுக்கல்லில் பணியாற்றி வந்த இவர் தற்போது மாநகர உளவுத்துறை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தன்னை தள்ளுவதாக போலீஸ்காரர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
    • தன்னை மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் செல்லதுரை. இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்லத்துரை மாற்றப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மற்றும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோரிடம் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவ விடுப்பில் இருக்கும் தன்னை எந்த காரணமும் இன்றி சொந்த மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்திற்கு மாற்றியது குறித்து காவலர் செல்லத்துரை காரணம் கேட்டுள்ளார்.

    ஆனால் முறையான பதில் அவர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்று கூறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தன்னை தள்ளுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தன்னை மீண்டும் சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என அவர் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    ×