search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இடி-மின்னலுடன் திடீர் மழை
    X

    நள்ளிரவில் புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட காட்சி.

    நெல்லையில் இடி-மின்னலுடன் திடீர் மழை

    • நெல்லையில் நேற்று ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
    • மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் உக்கிரம் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு அனல் பறக்கிறது.

    திடீர் மழை

    இந்நிலையில் நேற்றும் பகல் முழுவதும் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் மாலையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலு டன் கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.

    குறிப்பாக மாநகரில் தச்சநல்லூர் பகுதியில் கனமழை பெய்தது. அங்கு பலத்த காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    மின்தடை

    தச்சநல்லூர் பகுதியில் மின்தடையால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. அங்கு சில இடங்களில் இன்று அதிகாலை வரை மின்வினியோகம் இல்லை. எனினும் மின் ஊழியர்கள் விடிய, விடிய பணி செய்து மின் வினியோகத்திற்கு வழிவகை செய்தனர். பேட்டையில் இடி-மின்ன லால் முதியவர் பலியானார்.

    மணிமுத்தாறு அணை பகுதியில் பெய்த மழையால் சற்று நீர்வரத்து ஏற்பட்டது. அங்கு அதிகபட்சமாக 32.20 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கன்னடி யன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நெல்லையில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. அங்கு 2.60 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை பகுதியில் திடீர் மழை பெய்தது. காக்காச்சி முக்கு பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 64 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு பகுதியில் 48 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    Next Story
    ×