என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உள்ள காக்காச்சி என்ற பகுதியில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இந்த பூங்கா அமைய இருக்கும் நிலையில் பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ய அரசு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று ஆய்வு செய்தார். அம்பை வனச்சரக அலுவலகர் நித்யா உடனிருந்தார்.பூங்கா அமைக்க காக்காச்சி, மாஞ்சோலையை சேர்த்து 3 இடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர்கள் திரும்பினர். அப்போது வனத்துறை அதிகாரியை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மணிமுத்தாறு சுற்று வட்டார பகுதியை சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்கள் நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    அந்த மனுக்களில், வனப்பகுதியில் அமைந்துள்ள வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்தி ரையாகவும், இருசக்கர வாகனத்தில் செல்லவும் வனத்துறையினர் அனுமதி வழங்க கோரி மனு அளித்தனர். மேலும் அவர்களின் நீண்ட நாள் கோரி க்கையான கோவி லுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் மனு அளித்தனர்.

    அப்போது மணிமுத்தாறு பேரூராட்சி தலைவி அந்தோணியம்மாள், நகர செயலாளர் முத்துகணேஷ், ஜமீன் சிங்கம்பட்டி ஊரா ட்சி தலைவர் செந்தில்குமார், ஊர் நாட்டாமை சட்ட நாதன், துணை நாட்டாமை மாரியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர்.

    • தாழையூத்து துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை செயற்பொறியாளர் (கிராமப்புறம்) வெங்கடேஷ் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நெல்லை தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் மானூர் வட்டார பகுதி, தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மணிகண்டனுக்கும், செல்வமாலாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
    • மணிகண்டனின் சகோதரி பாப்பா காடுவெட்டியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்துள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டி காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வமாலா (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே மணிகண்டனின் சகோதரியான பத்தமடையை சேர்ந்த கணேசன் மனைவி பாப்பா (37) காடுவெட்டியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் செல்வமாலாவை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டனும், பாப்பாவும் சேர்ந்து, செல்வமாலாவை தாக்கினர். இதனால் காயமடைந்த அவர் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக மணிகண்டன், அவரது சகோதரி பாப்பா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
    • கடந்த 2 நாட்களாக அந்த கும்பல் முக்கூடல் அருகே சுற்றித்திரிந்துள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை அருகே உள்ள முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 70). இவர் தனது வீட்டை ஒட்டி கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    வெட்டிக்கொலை

    நேற்று இரவு வழக்கம்போல் ஆறுமுகம் கடையில் இருந்தபோது ஒரே மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தபடி 3 மர்ம நபர்கள் அங்கு வந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

    தகவல் அறிந்து முக்கூடல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகம் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தை அறிந்ததும் அவரது உறவினர்கள் உள்பட ஏராளமானோர் நெல்லை-முக்கூடல் சாலையில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம்

    கடந்த பொங்கல் தினத்தன்று ஆறுமுகத்தின் மகன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டி ருந்துள்ளார். அப்போது அவர்களுக்கும், அங்கு வந்த அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆறுமுகத்தின் மகன், எதிர்தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் இருந்து வந்த எதிர்தரப்பினர் சில மாதங்களாக திருப்பூருக்கு சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் அந்த கும்பல் கடந்த 2 நாட்களாக முக்கூடல் அருகே நந்தன்தட்டை, திருப்புடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்துள்ளது. இதனால் அந்த கும்பல் ஆறுமுகத்தின் மகனை கொலை செய்ய வந்திருக்கலாம். அந்த நேரத்தில் அங்கு ஆறுமுகம் இருந்ததால் அவரை அந்த கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    உடலை வாங்க மறுப்பு

    இதற்கிடையே கொலையாளி களை கைது செய்தால் மட்டுமே ஆறுமுகத்தின் உடலை பெற்றுக் கொள்ள போவதாகவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ள னர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தை யொட்டி முக்கூடலில் இருந்து அரியநாயகிபுரம் வரையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது.
    • சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது.

    நெல்லை:

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கோரமண்டல் ரெயில் விபத்தில் இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அந்த ரெயிலில் பயணித்து உயிர் தப்பியவர்களில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தப்பளகுண்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(வயது 45) என்பவரும் ஒருவர் ஆவார். விபத்து குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஜார்கண்ட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். அங்கு சபை ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். நாங்கள் விபத்துக்குள்ளான ரெயிலில் 2-ம் அடுக்கு குளிர்சாதன பெட்டியில் பயணித்தோம். நேற்றிரவு 7 மணியளவில் திடீரென நாங்கள் அமர்ந்திருந்த பெட்டி குலுங்கியது. இதனால் இருக்கைகளில் அமர்ந்திருந்த நாங்கள் அனைவரும் பெட்டிக்குள் கீழே விழுந்தோம். உடனே ரெயில் தடம் புரண்டதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

    இதனால் ரெயில் பெட்டியில் தீப்பற்றி விடக்கூடாது என்பதற்காக அதில் இருந்து உடனடியாக அலறியடித்துக் கொண்டு அனைவரும் வெளியேறினார்கள்.

    அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டிக்கு முந்தைய பெட்டிக்கு முன்பாக இருந்த அனைத்து பெட்டிகளும் விபத்தில் சிக்கியிருந்தது. சுமார் 9 பெட்டிகள் வரை இந்த விபத்தில் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. இதில் சில பெட்டிகள் அருகில் 3-வது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. அதில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் நெஞ்சை உறைய செய்தது. பின்னர் அங்கு நிற்கவே மிகவும் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. இதனால் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு புவனேஸ்வருக்கு கிளம்பி வந்து விட்டோம். இப்படியொரு சம்பவம் நடந்துவிடும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர்.
    • டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    நெல்லை:

    வைகாசி மாதம் பவுர்ணமி தினமான வைகாசி விசாகம் அன்று தமிழ்க்கடவுள் முருகன் அவதரித்தார். இதையொட்டி ஆண்டுதோறும் வைகாசி விசாகம் அன்று முருகன் கோவில்களில் விழாக்கள் மற்றும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெறும்.

    சிறப்பு வழிபாடு

    அதன்படி இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டமாக கடற்கரையில் திரண்டனர். தொடர்ந்து அங்கு தங்களது நேமிதங்களை நிறைவேற்றும் விதமாக கடலில் இருந்து மண் சுமந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

    மாநகர பகுதிகள்

    இதேபோல் மாநகர பகுதி யில் உள்ள டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், சந்திப்பு சாலை குமாரசுவாமி கோவில், பாளை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அவர்கள் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்திருந்தனர்.

    இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அங்கு சிவநேச செல்வர்கள் கலந்து கொள்ளும் வைகாசி விசாக சிவ பூஜை வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரு வுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவின் திருமுறை ஆசிரியர் வள்ளிநாயகம், அடியார்கள் கலந்து கொன்டனர். சந்திப்பு சாலை குமாரசுவாமி கோ விலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜை கள் நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்ற னர்.

    டவுன் நெல்லையப்பர் கோவிலில் விசாக திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று இரவு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், செப்பு தேரில் சண்முகரும், வெள்ளி மூஞ்சுறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரர் சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளும் நான்கு ரத வீதியையும் சுற்றி வீதி உலா வர உள்ளனர்.

    • வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • மின் நுகர்வோர்கள் கேட்கிற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் வள்ளியூரில் நடைபெற்றது.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்ட செயற்பொ றியாளர் வளன்அரசுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் கோட்ட த்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர் களும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் மின் பொறி யாளர்கள் மற்றும் அலுவல ர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும் போது, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் மின் பாதை களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அருகில் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப் படுத்துவதற்கு விரைந்து நடவடி க்கை எடுக்க உத்தர விட்டார்.

    சேவை மையம்

    விநியோகப் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உண்டான மின்மாற்றிகளை முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், வள்ளியூர் கோட்ட பகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கிற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சா ரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்த மான அனைத்து தேவை களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    • கொம்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
    • நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    பாளையை அடுத்த கிருஷ்ணா புரம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் கொம்பன் (வயது 54). இவர் கொலை வழக்கில் சிவந்திபட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்ட னை கைதியாக பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொம்பன், மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்துள்ளது. அதற்காக அவர் பரோலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நொச்சி குளத்திற்கு வந்திருந்தார். நாளை மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருந்த நிலையில் நேற்று இரவு திடீரென கொம்பன் மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கொம்பன் இறந்தார்.

    • ஏசுராஜ் உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணனை வழி மறித்து தாக்கினர்.
    • காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரியநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 41). விவசாயி. இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஏசுராஜ் (19) நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், இதனை முத்துகிருஷ்ணன் ஊரில் சொன்னதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை வழி மறித்த ஏசுராஜ், திரவியம் மகன் ராஜா, கனகராஜ் மகன் ஜேம்ஸ், சேர்மத்துரை மகன் சிமியோன், சுப்பிரமணியபுரம் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனை தாக்கினர்.

    இதுபோல முத்துகிருஷ்ணனும், ஏசுராஜை தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி இருவரும் தனித்தனியாக விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இதுதொடர்பாக முத்துகிருஷ்ணன், ஏசுராஜா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், வி.திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
    • தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா, பழைய மாணவர்கள் கூடுகை விழா ஆகிய முப்பெரும் விழா தெற்கு கள்ளிகுளம் காமராஜ் நடுநிலை ப்பள்ளியில் நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு விழாவிற்கு தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக பள்ளிக்கு வந்த சபா நாயகரை பள்ளி தாளாளர் மருத்துவர் மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பள்ளி ஆசிரியைகள் மாணவ- மாணவிகள் வரவேற்றனர்.

    பள்ளியில் அமைக்கப்ப ட்டிருந்த காமராஜர் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், பள்ளியின் முன்னாள் மாணவர் வி. திரவியம் ஆகியோர் திறந்து வைத்தனர். டி.டி.என்/ கல்வி குழும தலைவர் டி.டி.என். லாரன்ஸ் குத்து விளக்கேற்றினார்.

    புதிய கட்டிடம்

    தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி புதிய கட்டிடத்தை அர்ச்சித்தார். பள்ளி தலைமை ஆசிரியை லெற்றீசியா வரவேற்று பேசினார். விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மி. ஜோசப் பெல்சி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜ் குமார், துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஆலிபன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பி னர் பாஸ்கர், கள்ளிகுளம் மருத்துவ அலுவலர் ஜெயம் டெல்சி, கள்ளிகுளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் கமலம், வார்டு உறுப்பினர் லிங்கம், செயலர் சுமிலா, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சமூகை முரளி, வள்ளியூர் வணிகர் நல சங்க செயலாளர் முல்லை. கவின் வேந்தன், பம்பாய் களிகை சங்க துணைத்தலைவர் சேவியர் ஆல்வின் மற்றும் உறுப்பினர் அருள் ரவி, முன்னாள் மாணவியும் சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையு மான பாக்கிய லெட்சுமி, கள்ளிகுளம் அலோசியஸ் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வேளாங்கண்ணி, பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை தங்கஜோதி, பள்ளி கட்டிட ஒப்பந்தக்காரர்கள் புனிதன், கவுதம், சண்முகசுந்தரம், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ -மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கல்வி பரிசு வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தாவும், காமராஜ் பள்ளி தாளாளருமான மருத்துவர் மி. ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர் சங்க உறுப்பி னர்கள் நிமலேஷ், மணி கண்டன், பனிமாதா பேரா லய நிர்வாகிகள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
    • திருட்டு குறித்து சுடலை திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பணகுடியில் நடந்த உறவினர் வீட்டு, நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ திறந்தும், அதிலுள்ள பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் மாயமாகியிருந்தது. சுடலை வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
    • இன்று இரவு சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுயம்புலிங்கசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

    திருவிழாவையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. மதியம் உச்சிகால பூஜை நடந்தது. பக்தர்கள் சுவாமியை அருகில் நின்று தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி நீண்ட வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சாயரட்சய பூஜை நடந்தது. தொடர்ந்து தென்னாடுடைய சிவன், முழுமுதற்கடவுள் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, சுயம்புலிங்க சுவாமி வரலாறு, வில்லிசை, நகைச்சுவை பட்டிமன்றம் உள்பட பல்வேறு நிகழ்சிகள் நடந்தது.

    இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கடல் மண்ணை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேச்சை கடன் செலுத்தினர். அது கடற்கரையில் குன்றுபோல் காட்சியளித்தது ஏராளமானவர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    இன்று இரவு விழாவின் சிகர நிகழ்ச்சியான சுப்பிரமணியசுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகரமீனுக்கு காட்சியளிக்கிறார். விசாகத் திருவிழாவில் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி. முருகேசன், துணைத்தலைவர் கனகலிங்கம், உறுப்பினர்கள் ராஜாமணி, ஜீவரத்தினம், தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்துள்ளார்.

    ×