என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானூர், தச்சநல்லூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை
- தாழையூத்து துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
நெல்லை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நெல்லை செயற்பொறியாளர் (கிராமப்புறம்) வெங்கடேஷ் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நெல்லை தாழையூத்து துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் மானூர் வட்டார பகுதி, தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






