என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடி அருகே வீடு புகுந்து பணம் கொள்ளை
    X

    திருக்குறுங்குடி அருகே வீடு புகுந்து பணம் கொள்ளை

    • வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது.
    • திருட்டு குறித்து சுடலை திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுடலை (வயது 35). விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பணகுடியில் நடந்த உறவினர் வீட்டு, நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோ திறந்தும், அதிலுள்ள பொருட்கள் சிதறியும் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பீரோவில் பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் மாயமாகியிருந்தது. சுடலை வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர் வழக்கமாக வைக்கும் இடத்தில் இருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×