என் மலர்
திருநெல்வேலி
- முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
- தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாய் பாசனத்திற்கு இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயில் இருந்து 150 கன அடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
இதன் மூலம் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்து 987 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலம் மறைமுகமாக 1013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது அமைச்சரவைக்கு யார்-யாருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை கவர்னர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நீதிமன்ற காவல், வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்க கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்கக்கூடாது. தொடர்ந்து, கவர்னர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழ்நாட்டில் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையாக சென்னையில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந் தேதி தமிழ்நாட்டிற்கு உள்ளேயே இயக்கப்படும் வகையில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரெயிலுக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னையில் இருந்து 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கோவையை சென்றடைவதால் வந்தே பாரத் ரெயில் சேவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் முழுமை அடைந்துள்ளது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அதிக வருவாய் கொடுக்கும் ரெயில் நிலையமான நெல்லை வரைக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் நல சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் பேசிய மத்திய இணை மந்திரி முருகன் இந்த வருடத்திற்குள் சென்னையில் இருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்படி சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் இயக்கப்பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நிறுத்துவதற்கான பிட்லைன் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்படும் பகுதியில் வந்தே பாரத் ரெயில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரெயிலை பொறுத்தவரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முழுமையான மின் இணைப்புகள் இருந்தால் மட்டுமே அதனை மேற்கொள்ள முடியும். இதனால் பிட்லைனில் மின் மயமாக்கல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இதற்காக அங்கு டிரான்ஸ்பார்ம்கள் உள்ளிட்ட கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தளவாட பொருட்கள் கொண்டு வரப்பட்டு அதற்கான பணிகளில் ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே சென்னை- நெல்லை இடையே மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று 110 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவிரைவு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே வந்தே பாரத் ரெயிலை இயக்குவதற்கு சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது.
கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுகிறது. எனவே சென்னை- நெல்லை வந்தே பாரத் ரெயில் பகல் நேரத்தில் இயக்கப்படுமா? அல்லது மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தற்போது இயக்கப்பட்டு இயக்கபடும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு செல்ல பயண நேரம் 10 மணிநேரம் ஆகிறது. ஆனால் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் பயண நேரம் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து சந்திப்பு ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது:-
பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே மூலம் விரைவில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில்கள் இயக்கப்படுவதால் அதே தண்டவாளங்களில் வந்தே பாரத் ரெயிலை இயக்கலாம். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.
அதே நேரத்தில் நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் வந்து சேர்ந்தவுடன் அதில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது சந்திப்பு ரெயில் நிலையத்தில் மற்ற ரெயில்களுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பிட்லைனில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரெயிலை பொருத்தமட்டில் முழுமையான மின் இணைப்பு இருந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
எனவே வந்தே பாரத் ரெயில் பெட்டிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ரெயில் நிலையத்தில் உள்ள பிட்லைனில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
- கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.
நெல்லை:
நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் அவ்வப்போது திறந்து எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி உண்டி யல்கள் திறந்து எண்ணப்பட்டன.
21 உண்டியல்கள்
இந்நிலையில் நெல்லை யப்பர் கோவிலின் நிரந்தர உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டன. அதன்படி 21 நிரந்தர உண்டியல்கள் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து திறந்து எண்ணப்பட்டது.
இதில் கண்காணிப்பு அதிகாரியாக நாகர்கோவில் இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் தங்கம், நெல்லை மேற்கு பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் தனலெட்சுமி என்ற வள்ளி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து ள்ளனர். இதில் தன்னார்வ லர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
- நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரியநாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.
- ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 32-வது வார்டுக்கு உட்பட்ட காரிய நாயனார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை பணியின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு 32-வது வார்டு கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ், மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து, கவுன்சிலர் சுந்தர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அருள்ராஜ், மண்டல தலைவர் ராஜேந்திரன், ஊர் தலைவர் சேர்மக்கனி, ஒப்பந்ததாரர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.
- தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறை யினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்க ப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.
- பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பணகுடி:
பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக மும்பை ரெயில், குமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை செல்லும். அதில் ஏதேனும் ஒன்றில் அவர் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
அதே நேரத்தில் அவர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தாரா? அல்லது ஏதேனும் பணிச்சுமை காரணமாக அவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்jது.
- மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
நெல்லை:
நாங்குநேரியில் கடந்த 11-ந் தேதி விளைநிலங்களுக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டதாக கிடைத்த தகவலையடுத்து நெல்லை வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.
வீடுகளிலேயே முடங்கிய மக்கள்
நாங்குநேரி பெரியகுளத்தின் கரை, மறுகால்குறிச்சி செல்லும் சாலையோரம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள விளைநிலங்களில் கரடியின் நடமாட்டம் இருந்ததால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, வாழை வயல்களுக்குள் கரடியின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. கரடியை பிடிக்க 2 கூண்டுகள் வரவழைத்து அதனை 2 இடங்களில் வைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
போக்குகாட்டும் கரடி
4-வது நாளாக இன்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கரடிக்கு பிடித்தமான பழ வகைகளை கூண்டில் வைத்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால் கரடி கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
இந்நிலையில் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கரடியை விரைந்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று வனத்துறை அதிகாரிகள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதூர் பகுதியில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கரடியின் நடமாட்டம் புதூர் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவெடுத்துள்ளோம். விரைவில் கரடியை பிடித்து விடுவோம்." என்றனர்
- பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.
- நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.
வெட்டிக்கொலை
நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அஜித்தின் இரு கைகளும் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.
இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அஜித்திற்கும், அவரது உறவினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் நண்பர்களுடன் மது குடிக்கும்போது மதுவை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
- களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர்.
- போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது 4 பேர், சிறுவர்களுக்கு ஏதோ விற்பனை செய்து கொண்டி ருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் களக்காடு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த கொம்பையா (வயது22). கலுங்கடி நடுத்தெருவை சேர்ந்த செல்வசகாயம் (18), கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த ஐசக் (18), ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், 4 பேரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
+3
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது.
- பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
பன்னீர் தெளித்து வரவேற்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் இன்று 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை யொட்டி கடந்த 2 நாட்களாகவே பள்ளி அறை கள் சுத்தப்படுத்தப் பட்டு தயார்படுத்தப்பட்டது.
பள்ளிக்கு வருபவர்களை உற்சாகமாக வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடு களை பள்ளி தலைமை யாசிரியர்கள் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலையில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் விதமாக ஆசிரியர்கள் நுழைவு வாயிலில் நின்று சாக்லெட், பூங்கொத்து கொடுத்தனர். ஒருசில பள்ளிகளில் குழந்தை களுக்கு கைகள் மற்றும் கண்ணங்களில் சந்தனம் வைத்தும், பன்னீர் தெளித்தும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.
புத்தகங்கள் வினியோகம்
மாநகர பகுதியில் இன்று பள்ளிகள் திறப்பையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்கனவே அரசு தொடக்க பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப் பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர் களுக்கு இன்று முதல் நாளிலேயே புத்தகங் கள் வழங்கப்பட்டது. காலை யில் இறை வணக்கத்துடன் பள்ளி கள் தொடங்கின.
இதனையொட்டி மெயின் சாலைகளில் உள்ள பள்ளிகள் முன்பு சற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவற்றை போக்குவரத்து போலீசார் சரிசெய்தனர். அதன் பின்னர் குழந்தைகளுக்கு நீதிபோதனை கதைகளை ஆசிரியர்கள் கூறினர்.
பெரும்பாலான பள்ளி களில் நீண்ட நாட்கள் விடுமுறைக்கு பிறகு மாணவ-மாணவிகள் சென்றதால் ஏதோ புதிய இடத்தை பார்ப்பதுபோல் ஒருவித தயக்கத்துடனே பள்ளிக்கு வந்திருந்தனர். இதுதவிர கடந்த கல்வி யாண்டில் அங்கன்வாடி களில் படித்துவிட்டு புதிதாக தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து அறைகளில் அமர்த்தி வைத்தனர்.
ஆனாலும் அங்குள்ள புதிய ஆட்கள், புதிய சூழ்நிலைகளை கண்டு குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுதனர். அவர்களை சமாதானப்ப டுத்துவதற்காக ஆசிரியர்கள் அவர்களுக்கு சாக்லெட், பிஸ்கெட், விளையாட்டு பொம்மைகள் கொடுத்த தையும் பார்க்க முடிந்தது. மேலும் சிலர் பள்ளி சுவர்களில் வரைந்துள்ள கார்ட்டூன் பொம்மைகளை காண்பித்து சமாதானப் படுத்தினர்.
ஒருசில குழந்தைகள் அதிக அளவில் அழுது கொண்டே இருந்ததால், அவர்களை பெற்றோர் மீண்டும் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
- ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடபுத்தகங்கள், இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர் பொன்மாணிக்கம் ஜான், மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல், மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவர் ஆடிட்டர் உமா மகேஸ்வரன், பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், மாநகர பிரதிநிதி சாமுவேல், வட்ட செயலாளர்கள் ஜான் கென்னடி, கிங் பாலா, கழக பிரதிநிதிகள் கிறிஸ்டோபர், தினகரன், நிர்வாகிகள் பேராட்சி நாதன், கணேஷ்,சிவா, சரவணன், ஜேஸ்பர், தேவா, அலெக்ஸ், அட்டினா லூயிஸ், பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமேரி கனகசீலி, உதவி தலைமை ஆசிரியர் பியூலா, ஆசிரியர் ஜார்ஜ் இனிகோ மற்றும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- ரத்த தானம் வழங்கிய 50 பேருக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
- உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவமனையில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று மனிதச் சங்கலி நடைபெற்றது.
இதில் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.
பாராட்டு நிகழ்ச்சி
தொடர்ந்து மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் ஆண்டுக்கு 3 முறை ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 125 முறை ரத்த தானம் வழங்கிய டவுன் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 50 பேருக்கு சான்றித ழும், கேடயமும் வழங்கி கலெக்டர் கார்த்திகேயன் பாராட்டினார்.
பின்னர் மருத்துவ மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் ரத்த தானம் செய்வது தொடர் பாக உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
ரத்த வங்கி துறை எனக்கு பிடித்த துறை. காரணம் நான் மருத்துவம் படிக்கும் போது ஆப்சனல் பாடமாக ரத்த வங்கி துறையைத்தான் தேர்வு செய்தேன். அரிதான ரத்த பிரிவுகள் உட்பட இன்றைக்கு ரத்தம் இல்லா மல் ஒரு உயிரிழப்புகள் நிகழாது என்ற நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது. அதற்கு காரணம் ரத்த கொடையாளர்கள் தான்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ரத்தம் கிடைக்கிறது. அதுவும் ரத்த கொடையாளர்கள் மூலமாகவே கிடைக்கிறது. மகப்பேறு கால உயிரிழப்புகளை தடுப்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா உள்ளது. அதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது.
மகப்பேறு காலத்தில் தாய், சேய் என இருவரையும் காப்பாற்றுவதில் ரத்த கொடையாளர்களின் பங்கும் முக்கியமானது. சமூக அக்கறையுடன் பலர் ரத்த தானம் செய்ய முன்வருவதால் உயிரிழப்பு களை படிபடியாக குறைத்து வருகிறோம்.
இன்றைக்கு ரத்த தானம், கண் தானம் என வளர்ந்து இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடப்பதற்கு அடிப்படையே இந்த ரத்த தானம்தான். இதற்காக தமிழக மக்கள் ரத்ததான கொடையாளர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளா ர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது
நிகழ்ச்சியின் போது நெல்லை அரசு மருத்துவ மனையின் ரத்த வங்கி துறை தலைவர் டாக்டர் மணிமாலாவிற்கு கலெக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.
அப்போது டாக்டர் மணிமாலா பேசுகையில், நெல்லை அரசு மருத்துவ மனையில் கடந்த 22 ஆண்டுகளில் ரத்தம் இல்லாமல் ஒரு உயிரிழ ப்புகள் கூட நிகழவில்லை. கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 38 யூனிட் ரத்தம் தானமாக சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் 23 ஆயிரத்து 500 பேர் காப்பாற்றப்ப ட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி உதவி முதல்வர் சுரேஷ் துரை, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், நிலைய மருத்துவ அலுவலர் ஷியாம் சுந்தர் மற்றும் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) லதா, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் அமலவளன், திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.






