பணகுடி அருகே ரெயில்முன் பாய்ந்து மின் ஊழியர் தற்கொலை

பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பணகுடி அருகே ரெயில்முன் பாய்ந்து மின் ஊழியர் தற்கொலை
Published on

பணகுடி:

பணகுடி வைஷ்ணவி தெருவை சேர்ந்தவர் முருகேச பெருமாள்(வயது 48). இவர் பணகுடி அருகே உள்ள தெற்கு பெருங்குடி மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று முருகேச பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரிய வந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக மும்பை ரெயில், குமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை செல்லும். அதில் ஏதேனும் ஒன்றில் அவர் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அதே நேரத்தில் அவர் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தாரா? அல்லது ஏதேனும் பணிச்சுமை காரணமாக அவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com