search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul Waqab MLA"

    • கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • பாளை மண்டலத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சருக்கு நன்றி

    கூட்டத்தில் பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கடந்த சில கூட்டங்களாக மேயர்- கவுன்சிலர்களிடையே பிரச்சி னைகள் நடந்து வந்த நிலையில், கட்சி தலைமை அறிவுறுத்தல்படி அமைதி யான முறையில் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்ய ப்பட்டிருந்தது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேயர் சரவணன் திருக்குறள் வாசித்து கூட்ட த்தை தொடங்கினார். மகளி ருக்கு மாதாந்திர உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி யதற்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் உடல்களை அரசு மரியா தையுடன் தகனம் செய்ய வேண்டும் என்று அறிவித்த மைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது. சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் கவுன்சிலர் காந்திமதி என்ப வருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கூட்டத்தில் 100- க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து மேயர் சரவணன் பேசும் போது, தசரா விழா நெருங்கு வதை யொட்டி எந்தெந்த கோவில் களில் தசரா விழா க்கள் கொண்டா டப்படுகி றதோ, அந்தந்த பகுதி களில் உள்ள சிறு பாலங்கள், சாலைகள், வாறு கால்களை சீரமைக்க வேண்டும்.

    மேலும் தசரா விழா கொண்டாடப்பட உள்ள கோவில்களை சுற்றிலும் சுத்தம் செய்வதற்கு மாநக ராட்சி பணியா ளர்களுக்கு அறிவுறுத்த உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

    உதவி கமிஷனர் நியமிக்க கோரிக்கை

    மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா பேசுகை யில், கடந்த 2 மாதமாக கூட்டம் நடக்கவில்லை.அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்க வேண்டும் என கவுன்சிலர்கள் எதிர் பார்க்கின்றனர். ஆனால் சில வார்டுகளுக்கு பணிகள் ஒதுக்கப்படவில்லை. எனவே அனைவருக்கும் பணிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த வாரம் மீலாடி நபிக்கு மாநகராட்சி சார்பில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டு மீலாடி நபியை கொண்டாடு வதற்கு வழிவகை செய்த மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலப்பாளையம் மண்டலத்துக்கு நிரந்தரமாக ஒரு உதவி கமிஷனர் மற்றும் உதவி பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாக்கடை கலந்து குடிநீர் வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும். புதிய குடிநீர் தொட்டி, கழிவு நீர் ஓடை உள்ளிட்ட பிரச்சி னைகளை தீர்க்க வேண்டும் என்றார்.

    2 உதவி கமிஷனர்கள் புதிதாக நியமனம்

    அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, தேங்கி கிடக்கும் பணிகளை துரிதமாக முடிக்க 2 உதவி கமிஷனர்கள் மாநக ராட்சிக்கு நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பொறுப் பேற்பார்கள். இதே போல் பொறி யாளர்களுக்கும் காலி பணியிடம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணியிட மும் நிரப்பப்படும் என்றார்.

    பாளை மண்ட லத்துக்குட்பட்ட விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. முறப்பநாடு பகுதியில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது? அது குறித்து தெரிவிக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாளை மண்டல சேர்மன் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பாதாள சாக்கடை திட்ட பணிகள் சுமார் ரூ.1600 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் கட்ட பணிகள் டெண்டர் விட ப்பட்டு பாளை, மேலப்பா ளையம் மண்ட லங்களில் பணி தொடங்கிவிட்டது. அடுத்த 2 கட்டங்களுக்கான டெண்டரும் விரைவில் விடப்படுகிறது. முறப்பநாடு திட்டத்துக்கும் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆர்டர் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். ஒரு மாதத்தில் அந்த பணிகள் தொடங்கி விடும் என்றார்.

    வழிகாட்டி பலகை

    நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசுகையில், வார்டு பகுதி முழுவதும் கழிவு நீர் ஓடை பிரச்சினை கடுமையாக உள்ளது. தெரு நாய் பிரச்சி னையால் மக்கள் மிகுந்த சிர மத்திற்கு உள்ளாகி உள்ளனர். பம்பன் குளம் சீரமைப்பு செய்யப்ப ட்டுள்ளது.ஆனால் அங்கு பாதுகாப்பு வசதி இல்லாமல் உள்ளது.

    பேட்டை பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையம் எங்குள்ளது என்றே தெரியவில்லை. அதற்கு வழிகாட்டி பலகை வைக்க வேண்டும். காலையில் கொசு மருந்து அடித்தால் கொசு சாவதில்லை. மயக்கம் மட்டுமே அடை கிறது.மாலை ஒரு வேளை கூடுதலாக கொசு மருந்து அடிக்கவேண்டும் என்றார்.

    தொடர்ந்து 55-வது வார்டு கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநகர பகுதியில் அம்ருத் திட்ட த்தின் கீழ் அமைக்கப்ப ட்டுள்ள பூங்காக்களில் விளக்குகள் சரிவர எரியவில்லை. அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் சந்திரசேகர் பேசுகையில், டவுன் போஸ் மார்க்கெட் இடிக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு அங்கு நூலக கட்டிடம் இருந்தது. தற்போது அங்கு நூல கத்திற்கு கட்டிடம் கிடை யாது என்று தகவல்கள் வந்துள்ளது. எனவே அந்த பகுதியில் மீண்டும் நூல கத்தை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    கவுன்சிலர் அமுதா கூறுகையில், எனது வார்டு 7 கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 14,000 மக்கள் வசித்து வரு கின்றனர். இங்கு அனைத்து சாலைகளும் மோசமாக இருந்து வருகிறது. ராசாத்தி காலனி பகுதியில் ஓடை மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், உலகநாதன், கிட்டு, ரவீந்தர், முத்துலட்சுமி, வரிவிதிப்பு திட்டக்குழு தலைவர் சுதா மூர்த்தி, கோகுல வாணி, ஜெகநாதன், சந்திரசேகர், பவுல்ராஜ், கருப்பசாமி கோட்டையப்பன், அனு ராதா சங்கர பாண்டி யன், வில்சன் மணித்துரை, நித்திய பாலையா, சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன் என அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசினார்.
    • மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் வகாப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரம்பரியமிக்க இந்த நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். எனது அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது இந்த மாநகராட்சி தான். கடந்த 2006 -ம் ஆண்டு மாநகராட்சி கவுன்சிலராக பொறுப்பேற்றேன். இங்கு மிகவும் திறமையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை எல்லாம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

    எனது சட்டமன்ற தொகுதிக்கு தேவையான சிறிய அளவிலான கோரிக்கைகளை கமிஷனரிடம் செல்போனில் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுத்தேன். பெரிய அளவிலான கோரிக்கைகளை நேரில் சந்தித்து மனுவாக கொடுத்து வருகிறேன். அதற்கான நடவடிக்கை களும் நிறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இங்குள்ள மாமன்ற உறுப்பினர்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக திகழ்ந்து வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து மனமாட்சியத்திற்கு இடமில்லாமல் செயல்பட வேண்டும். மாமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் மக்கள் பணிகளுக்கு வெற்றியை பெற முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடபுத்தகங்கள், இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர் பொன்மாணிக்கம் ஜான், மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல், மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவர் ஆடிட்டர் உமா மகேஸ்வரன், பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், மாநகர பிரதிநிதி சாமுவேல், வட்ட செயலாளர்கள் ஜான் கென்னடி, கிங் பாலா, கழக பிரதிநிதிகள் கிறிஸ்டோபர், தினகரன், நிர்வாகிகள் பேராட்சி நாதன், கணேஷ்,சிவா, சரவணன், ஜேஸ்பர், தேவா, அலெக்ஸ், அட்டினா லூயிஸ், பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமேரி கனகசீலி, உதவி தலைமை ஆசிரியர் பியூலா, ஆசிரியர் ஜார்ஜ் இனிகோ மற்றும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாப்பாக்குடி யூனியனுக்கு உட்பட்ட வெள்ளாளன்குளம் பஞ்சாயத்துக்கு ரூ. 23.56 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சாயத்து தலைவரும், மானூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி தி.மு.க. செயலாளருமான மகாராஜன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஒன்றிய செயலாளர்கள் மாரி வண்ணமுத்து, மாரியப்பன், மத்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் பல்லிக்கோ ட்டை செல்லத்து ரை, மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து, பாப்பாக்குடி ஊராட்சிமன்ற தலைவர்கள் ஆனைக்குட்டி பாண்டியன், சொர்ணா, பாலசுப்பிர மணியன், முப்புடாதி, ஒன்றிய கவுன்சிலர்கள் வளர்மதி, சுப்புலட்சுமி, காசி, முபின், முத்துமாரி, சுபாவாணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவன்பாண்டியன், அருணாசல பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் மாணவ-மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி பள்ளிகளுக்குள் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.

    அதனை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கரகாட்டம், நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இன்று முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ ர்களுக்கு நடத்தப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை மறுநாள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.  

    ×