பாளையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா-அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
கலை இலக்கிய திருவிழா போட்டியில் நடனமாடிய மாணவிகள்.
கலை இலக்கிய திருவிழா போட்டியில் நடனமாடிய மாணவிகள்.
Published on

நெல்லை:

தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்திலும் மாணவ-மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பள்ளிகளுக்குள் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.

அதனை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கரகாட்டம், நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இன்று முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ ர்களுக்கு நடத்தப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை மறுநாள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com