என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, 19-ந்தேதி க்குள் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக் கிணங்க அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக சேர்வ தற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக்கெடு வருகிற 19-ந்தேதி அன்று மாலை 5 மணி வரை நீட்டித்து இறுதி யான கால அவகாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நெல்லை மாவட்டத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் விண்ணப்ப படிவத்தில் விரைவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, 19-ந்தேதி க்குள் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்கு மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை பெற்றுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே, கட்சி பொறுப்புகளில் நிய மனம் செய்யப்பட்டு பணி யாற்றுவதற்கும், அமைப்புத் தேர்தல்களில் போட்டியி டுவதற்கும், வாக்களிப்ப தற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
+2
- புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும்.
- நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட தனி ரெயில் மூலமாக நெல்லை வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலையத்தை பார்வையிட்டார். அதனை தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும். அதற்கு தேவையான இட வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும்.
நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1893-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழமையான ரெயில் நிலையங்களில் சந்திப்பு ரெயில் நிலையமும் ஒன்றாகும். இங்குள்ள 5 நடைமேடைகளில் தினமும் 48 ஜோடி ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.
கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.80.60 கோடி வருவாய் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வருவாய் ரூ.111.7 கோடியை எட்டியது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையத்தின் தரம் என்.எஸ்.ஜி.-2ல் இருந்து என்.எஸ்.ஜி-3க்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் இங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நெல்லையின் அமைவிடம், தற்போதைய சூழல், ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உயரும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நிலையத்தை வடிவமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான மாதிரி படம் வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச தரத்திலான விமான நிலையம் போல் படங்கள் காட்சியளிப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்னும் 4 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு இயக்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த ரெயில் இயக்கப்பட்டால் சுமார் 3 மணி நேரம் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
- கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.
தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 57 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 66 அடியானது. இதேபோல் 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்றில் இருந்து 8 அடி உயர்ந்து இன்று 45 அடியானது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நேற்று 40 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியில் நீடிக்கிறது.
மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினாரில் 70 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 42.6 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 21 மில்லி மீட்டரும், கடனாவில் 22 மில்லிமீட்டரும், ராமநதியில் 20.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், அம்பை, நாங்கு நேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வள்ளியூரில் சாரல் பெய்தது. அதிகபட்சமாக அம்பையில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 48 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று 5 அடி உயர்ந்து காலை நிலவரப்படி 53.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3,882 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்மட்டம் உயரும்.
சேர்வலாறு அணையில் நேற்று 73.46 அடி நீர் இருந்த நிலையில், தொடர்மழையால் ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 90.19 அடியை எட்டியுள்ளது. அங்கு 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.80 அடியாக நீடிக்கிறது.
- சாலையில் தேங்கி இருந்த மழை நீரால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- விபத்து தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த ராமையன்பட்டி சங்கு முத்தம்மாள் தெருவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, நாங்கு நேரியை அடுத்த முதலைகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நேற்று ராமையன்பட்டியில் திருமணம் நடந்தது.
மாலையில் புதுமண தம்பதிகளை முதலைகுளத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு உறவினர்கள் 2 கார்களில் அழைத்துச் சென்று விட்டுள்ளனர். பின்னர் நள்ளிரவில் அங்கிருந்து பெண் வீட்டார் தங்களது சொந்த கிராமத்திற்கு திரும்பினர். அப்போது ஒரு காரில் சாமித்துரை(வயது 40), பிரவீன்(21), கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்திரகாளி, சாம்சன்பிரபு, லெட்சுமணன், மற்றொரு முத்துக்குமார், மற்றொரு கண்ணன் ஆகிய 10 பேர் பயணம் செய்தனர். காரை நவீன் ஓட்டி வந்தார். மற்றொரு கார் அவர்கள் பின்னால் வந்தது.
நவீன் ஓட்டிய கார் நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது பேரின்பபுரம் விலக்கு பகுதியில் சாலையில் தேங்கி இருந்த மழை நீரால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலை முழுவதும் ஈரமாக இருந்ததால் சிறிது தூரத்திற்கு கார் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் சாமித்துரை மற்றும் பிரவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த கண்ணன், நவீன், முத்துக்குமார், பத்திரகாளி, சாம்சன்பிரபு, லெட்சுமணன், மற்றொரு முத்துக்குமார், மற்றொரு கண்ணன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களது காரின் பின்னே மற்றொரு காரில் வந்த உறவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் இறந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த லெட்சுமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ள 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த பிரவீன் டிரைவராகவும், சாமித்துரை கறிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர். இந்த விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
நான்கு வழிச்சாலையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பராமரிப்பு செய்பவர்கள் உறுதி செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாகி உள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.
- சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதியில் மாநகராட்சி பள்ளி அருகே கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன.
இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் தலைமையிலான போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது.
விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி அருள் செல்வம் (வயது 47) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அங்கு ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அவற்றை நாய்கள் கடித்து கொன்று விடும் என்று சில நாட்களாக அருள் செல்வம் அச்சத்தில் இருந்துள்ளார். இது தொடர்பாக சிலரிடம் அவர், இந்த நாய்களை மருந்து வைத்து கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தான் அந்த நாய்கள் இறந்து கிடந்துள்ளது என்ற விபரமும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, அவர் நான் நாய்களை கொல்லவில்லை என்று கூறியுள்ளார். எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் 429-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து, உயிரிழந்த நாய்களை நெல்லையை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார்.
- மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதியுள்ளன. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு ஏற்கனேவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ராஜ்குமார் 2 ரன்களிலும், சரண் ரன் பூஜ்ஜியம் ரன்னிலும் அவுட்டாகினர். திருச்சி அணி 6 ஓவர்களில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மழை நின்ற பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் போட்டி சிறது தடைபட்டு 19 ஓவராக குறைக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார்.
அவர் 53 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 96 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது.
அப்போது மழை குறிக்கிட்டதால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்படி, நெல்லை அணி 16 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.
மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஆட்டம் சற்று தாமதமாகவே தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அஜித்தேஷ் குருசுவாமி அரை சதம் அடித்து 56 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து நிதிஷ் ராஜகோபால் 35 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் ,11.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
- டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி 146 ரன்களை எடுத்துள்ளது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் திருச்சி, நெல்லை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 6 ஓவர் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது தடைபட்டு 19 ஓவராக குறைக்கப்பட்டது.
திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். அவர் 53 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.
- தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பேனர்கள் கிழிந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது.
நெல்லை:
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதனை மீறி வைப்பவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை விதித்தல் உள்ளிட்ட நடவடி க்கை களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனை ஒட்டி நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பதாகைகள் உள்ளிட்ட வற்றை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரி களால் மேற்கொள்ளப்பட்டு வருகி றது.
இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மாடி பகுதியில் இரும்பு கம்பிகளால் சட்டங்கள் அமைக்கப்பட்டு அதில் விளம்பர பதாகைகள் வைத்திருப்பவர்கள் உரிமம் பெற்று வைத்துள்ளனரா? அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கான காலக்கெடு முடிந்து விட்டதா? என்பதையும் அறிந்து அவற்றை கண்காணிக்க கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். மேலும் தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால் காற்றின் வேகத்தால் பேனர்கள் கிழிந்து சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அவற்றையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார் வையில் பேனர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தச்சை மண்டலத்தில் சுகாதார அலுவலர் சாகுல் அமீது மேற்பார்வையில் சந்திப்பு பகுதியில் வணிக நிறுவனங்கள் மீது அமைக்கப்பட்டுள்ள பேனர்களை அப்புறப் படுத்தும் பணி இன்று நடைபெற்றது. அதேபோல் நெல்லை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் அனுமதி இன்றி வைக்கப் பட்டுள்ள பேனர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
- ஸ்டெல்லா பேபி படித்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார்.
- ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது என சிதம்பரத்திடம் ஸ்டெல்லா பேபி கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ஸ்டெல்லா பேபி (வயது 51). இவர் அப்பகுதியை 'டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார்.
பட்டதாரி வாலிபர்
இவர் படித்த இளைஞர்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். இந்நி லையில் தியாகராஜ நகரை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சிதம்பரம் (27) என்பவர் ஓமன் நாட்டு வேலைக்காக ஸ்டெல்லா பேபியை அணுகி உள்ளார்.
அப்போது அவர் சிதம்பரத்திடம் ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது. தினமும் 8 மணி நேரம் தான் வேலை, ரூ. 2 லட்சம் தந்தால் உன்னை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார். ஸ்டெல்லா பேபி கூறியதை நம்பி சிதம்பரம் ரூ.2 லட்சம் கொடுத்து ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அங்கு அவருக்கு தினமும் 12 மணி நேரம் வேலை வழங்கப்பட்டதோடு மாதம் ரூ.25 ஆயிரம் தான் சம்பளம் தருவோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் சொந்த ஊர் திரும்பினார்.
மேலும் தன்னை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஸ்டெல்லா பேபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாபேபியை கைது செய்தனர்.
- நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
- மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன.
நெல்லை:
மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலக் கருங்குளம் பகுதி. இங்கு விவசாய தோட்டங்கள் அதிகம் இருப்பதால் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள் காணவில்லை என கூறப்படுகிறது.
இறந்து கிடந்த 20 நாய்கள்
இந்நிலையில் இன்று காலையில் மேலக் கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20-க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். இவற்றில் பல நாய்கள் நீர்நிலைகளின் அருகே இறந்து கிடக்கிறது.
எனவே அந்த நீர்நிலைகளில் விஷம் கலக்கப்பட்டு அதை குடித்ததால் நாய்கள் இறந்ததா? அப்படி என்றால் அந்த நீரை மற்ற விலங்குகள் குடித்து அசம்பாவித சம்பவம் நிகழும் முன்பாக தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்க வேண்டும், இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும், சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 73.46 அடியாக உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 41 அடியாக இருந்த நிலையில் நேற்று 44 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி மேலும் 4 அடி உயர்ந்து 48.30 அடியானது. அணையில் 2 நாட்களில் சுமார் 10 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 50 அடியை நெருங்குவதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 8 அடி அதிகரித்து 73.46 அடியாக உள்ளது. தொடர்ந்து 2 அணைகளுக்கும் நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரையிலும் விடிய விடிய பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் அதிகபட்சமாக 21.6 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினாரில் அதிகபட்சமாக 50 மில்லிமீட்டரும், குண்டாறில் 36.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் நேற்று 28.50 அடியாக இருந்த நிலையில் இன்று 5 அடி உயர்ந்து 33.50 அடியானது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 33 அடியாக இருந்த நிலையில், இன்று 40 அடியாக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தின் பெரிய அணையான 152 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினாரில் நேற்று 49 அடி நீர் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் 1 அடி அதிகரித்து 26.75 அடியாக உள்ளது.






