என் மலர்
திருநெல்வேலி
- மது அருந்தியபோது ஆல்பர்ட் எஸ்லின், சந்தனக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
- படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பணகுடி:
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் எஸ்லின் (வயது24). டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர்.
கடந்த 30-ந்தேதி இருவரும் அப்பகுதியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தனக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் ஆல்பர்ட் எஸ்லின் வயிற்றில் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே கூடங்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்து இருந்தனர். தற்போது ஆல்பர்ட் எஸ்லின் இறந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை கோட்டத்தில் முதல் கட்டமாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது.
- சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர் களும் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் 'உயர்வுக்கு படி' என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நெல்லை கோட்டம்
நெல்லை கோட்டத்தில் முதல் கட்டமாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் கோகுல் சிறப்புரையாற்றினார்.
233 மாணவர்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிற்நுட்ப கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், குறுகியகால திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் என 17 கல்வி நிறுவனங்களும் கலந்து கொண்டன.
சேரன்மகாதேவி கோட்டம்
2-ம் கட்ட நிகழ்ச்சி சேரன்மகாதேவி கோட்டத்தில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 368 மாணவர்களும், 12 கல்வி நிறுவனங்களும் கலந்து கொண்டன.
இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்ட த்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம் குறித்த தகவல்கள் அடங்கிய வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்பட்டது.
மேலும் உயர்கல்வியில் சேருவதற்கு வங்கியினால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், தேவையான ஆவணங்கள், அரசு பணியில் சேருவதற்கான போட்டி தேர்வுகள், அதனை கையாளும் முறை, போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோ சனை வழங்கப் பட்டது. இத்தக வலை நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மரியசகாய ஆன்டனி தெரிவித்துள்ளார்.
- முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க செல்லும் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் குடும்ப அட்டையில் செல்போன் எண் பதிவு செய்தல், மாற்றம் செய்யலாம். இவற்றுக்கு தேவையான ஆதார் கார்டு மற்றும் குடியிருப்பு முகவரிக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பிறப்பு-இறப்பு சான்றிதழில் தேவையானவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
இதுதவிர ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.
பொது வினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு 9342471314 என்ற நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.
- சுகானந்தலிங்கம் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
- தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது.
களக்காடு:
திருக்குறுங்குடி அருகே உள்ள கீழகட்டளை வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுகானந்தலிங்கம், விவசாயி. இவர் தனது வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனைதொடர்ந்து வங்கி ஊழியர்கள் மதிப்பீடு தயார் செய்ய வீட்டை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்ராஜாவிற்கும், சுகானந்தலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்ராஜா, சுகானந்தலிங்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.
இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தினேஷ்ராஜாவை தேடி வருகின்றனர்.
- அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார்.
- ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் அருணாசலம் என்ற கக்கன் (வயது 60). விவசாயி. இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
அதே ஊரை சேர்ந்தவர் பிச்சைக்கண்னு மகன் முருகன். கடந்த 2021-ம் ஆண்டு தளபதிசமுத்திரம் குளத்தில் மீன் குத்தகை எடுப்பதில், அருணாசலம் தரப்பினருக்கும், முருகன் தரப்பினருக்கும் போட்டி ஏற்பட்டது.பின்னர் அருணாசலத்தின் தரப்பினருக்கு மீன் குத்தகை ஏலம் வழங்கப்பட்டது.
தனது தரப்பினருக்கு மீன் குத்தகை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த முருகனுக்கு, அருணாசலத்தின் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நாங்குநேரி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அருணாசலம், முருகனுக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து கோர்ட்டில் முருகனுக்கு எதிராக அருணாசலம் சாட்சி சொல்ல முடிவு செய்திருந்தார். இந்நிலையில் முருகன், அருணாசலத்திடம் தனக்கு எதிராக சாட்சி கூற கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும் உறவினர்கள் மூலம் சமரசமும் செய்துள்ளார். ஆனால் அதற்கு அருணாசலம் மறுத்து விட்டார். மேலும் கோர்ட்டில் முருகனுக்கு எதிராக சாட்சி கூறுவேன் என்று அவர் உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அந்த வழக்கு சம்பந்தமான விசாரணை நாங்குநேரி கோர்ட்டில் இன்று நடைபெறவிருந்தது. அருணாசலம் கோர்ட்டில் ஆஜராகி முருகனுக்கு எதிராக சாட்சி கூற தயாராகி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று இரவில் அருணாசலம் அதே ஊரில் உள்ள தனது மகள் முத்துசெல்வி வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த முருகன் உள்பட 5 பேர் சேர்ந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயங்களுடன், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி ஏர்வாடி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.
இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
- தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகரின் முக்கிய பகுதியாக வண்ணார்பேட்டை விளங்கி வருங்கிறது. மதுரை, சங்கரன்கோவில், ராஜபாளையம் மார்க்கமாக வரும் பஸ்கள் வண்ணார்பேட்டை நிறுத்தத்தில் நின்று செல்கிறது.
இந்த பஸ் நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, முதியவரின் பல் மற்றும் முகத்தின் பல்வேறு பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், பஸ் நிறுத்தத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று இடம்பெற்று இருந்தது. ராஜபாளையம், தச்சநல்லூர் பகுதி வழியாக நெல்லை வண்ணார்பேட்டை நோக்கி வந்த அரசு பஸ் ஒன்றில் இருந்து உயிரிழந்த முதியவரை ஒரு நபர் இறக்கி கழுத்தில் கை வைத்து தரதரவென்று இழுத்து சென்ற காட்சிகளும், அதனைத் தொடர்ந்து 2 வாகனங்களுக்கு பின்னால் நின்றுகொண்டு முதியவரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்யும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இந்த சம்பவம் கொலை என்பதை உறுதி செய்த போலீசார் பஸ்சில் வந்த நபர் யார்? அந்த நபருக்கும் முதியவருக்கும் என்ன தொடர்பு? எங்கிருந்து இந்த முதியவர் அழைத்து வரப்பட்டார்? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.
பல இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட முதியவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (வயது 74) என்பது தெரியவந்தது. அவரை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் அவருடைய மகன் கடல்கன்னி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
கடல்கன்னிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கேரளா மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
உயிரிழந்த மாரி முத்துவிற்கு ரத்தசோகை குறைபாடு இருந்த நிலையில் உடல் நலம் குன்றிய சூழலில் கடந்த சில நாட்களாக ராஜபாளையம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக நெல்லைக்கு அழைத்து செல்ல கூறிய நிலையில் நேற்று வீட்டில் இருந்து நெல்லை அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது.
மேலும் பஸ்சில் இருந்து கீழே தந்தையை இறக்கி அவரை தரதரவென இழுத்துச் சென்று கொலை செய்துவிட்டு அவர் வைத்திருந்த கைப்பையும் பிடுங்கிக் கொண்டு எந்தவித பதட்டமும் இன்றி அவரது மகன் கடல்கன்னி சாலையில் நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பெற்ற மகனே, தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே தப்பி ஓடிய கடல் கன்னியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் கேரளாவிற்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற நிலையில் ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது.
- மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மார்க்கெட்களுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் காய்கறிகள் வருவது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாக ஆந்திரா, கர்நாடகாவில் விளைச்சல் குறைந்ததால் காய்கறிகள் வரத்தும் குறைந்துள்ளது.
காய்கறி விலை
இதனால் கடந்த சில நாட்களாக டவுன் நயினார் குளம் மார்க்கெட், பாளை மார்க்கெட்களில் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிய நிலை யில் இன்று கிலோ ரூ.130 ஆக உயர்ந்தது. இதே போல சாம்பார் வெங்காயம் விலையும் ரூ.150 ஆக உயர்ந்தது. இஞ்சி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.
குடை மிளகாய், பச்சை மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. கத்திரிக்காய் ரூ.50 முதல் 60 வரையிலும் விற்கப்படும் நிலையில் கேரட் விலை ரூ.95 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டு பூண்டு ரூ.180, கொடைக்கானல் மலைப் பூண்டு ரூ.300, இமாச்சல் பூண்டு ரூ.200-க்கு விற்கப்படுகிறது.
சீரகம் கிலோ ரூ.800
இந்த நிலையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று பாளை மார்க்கெட்டில் சீரகம் விலை கிலோ ரூ.800- ஆக உயர்ந்தது. மிளகு ரூ.760 ஆகவும் அதிகரித்ததால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல துவரம் பருப்பு ரூ.158-ம், உளுந்து ரூ.132-ம், மல்லி ரூ.110-ம், வெந்தயம் ரூ.130-ம், கடுகு ரூ.120 ஆகவும் உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலையை தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 450 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில் இந்த விசைப்படகுகளில் கடலுக்கு செல்லும் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் இன்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 1,215 பைபர் படகு களும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து நாளை மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ. அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை:
அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்தும், நாங்குநேரி சட்டமன்றத்தில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு மகாராஜ நகரில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தவறாமல் கலந்து கொள்ளு மாறு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பில் சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.
- சந்திப்பில் இருந்து செல்லும் வாகனங்கள் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வரை சென்று திரும்பி தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தின் வழியாக சென்று வந்தது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன், தென்காசி, கடையம், அம்பை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சந்திப்பு பஸ் நிலையம் சென்று பயணி களை ஏற்றி, இறக்கிவிட்டு பின்னர் ராஜா பில்டிங் வழியாக வந்து தேவர் சிலை அருகில் திரும்பி ஈரடுக்கு மேம்பாலம் வழியாக பயண இடங்களுக்கு சென்று வந்தன.
ஸ்மார்ட்சிட்டி திட்டம்
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பில் சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி தொட ங்கியது. இதனால் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக போக்கு வரத்து நிறுத்தப் பட்டது. இதற்கிடை யே கொரோனா கால கட்டத்தில் தேவர் சிலை அருகே தற்காலிக பஸ் நிறுத்த ங்கள் அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திப்பில் இருந்து செல்லும் வாகன ங்கள் தேவர் சிலை அருகில் திரும்பி டவுன் செல்லும் பாதை பேரி கார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டது.
இதனால் சந்திப்பில் இருந்து செல்லும் வாகன ங்கள் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வரை சென்று திரும்பி தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தின் வழியாக சென்று வந்தது.
இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி பணி நிறைவடைந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவ்வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் செல்லும் பஸ்கள் கொக்கிரகுளம் வரை சென்று திரும்புவதால் காலநேரம் வீணாவதோடு பெட்ரோல், டீசல் உப யோகமும் அதிகரித்து ள்ளதாகவும், எனவே மீண்டும் தேவர்சிலை வழி யாக வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் டிரை வர்கள் மற்றும் வாகன ஓட்டி கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
இது தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறை யினருக்கும், அதிகாரி களுக்கும் கலெக்டர் கார்த்தி கேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முத்துக் கிருஷ்ணன் தலை மை யில் உதவி கோட்டப் பொறியாளர் சசிகலா, உதவி பொறியாளர் லட்சுமி பிரியா, வட்டார போக்கு வரத்து அலுவலர் சந்திரசேகர், காவல்துறை போக்குவரத்து உதவி ஆணை யாளர் காமேஷ் வரன், இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் இன்று சந்திப்பு தேவர்சிலை, அண்ணாசிலை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது வழக்கம் போல தேவர் சிலை வழியாக பஸ்களை இயக்க லாமா? அல்லது அண்ணா சிலை வழியாக இயக்க லாமா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தேவர்சிலை பகுதி சாலையின் அகலத்தி னை அளவீடு செய்தனர். இது தொடர்பாக அதிகாரி கள் கூறும்போது, இன்றைய ஆய்வு பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்.
அதன் அடிப்ப டையில் மாற்று வழியில் வாகனங்களை இயக்குவது குறித்து கலெக்டர் முடிவெடுப்பார் என்றனர்.
- தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
அம்பையில் இருந்து இன்று ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆண், 2 பெண்கள், ஒரு குழந்தை என 4 பேர் வி.கே.புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் அம்பை அருகே கோடராங்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது எதிரே வந்த வாகனம் டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு அம்பை போலீசார் விரைந்து சென்று பலியான 4 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் யார்? விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லை:
நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அங்கு புதிய அலுவலகம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வேலையை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நாங்குநேரி யூனியனில் இயங்கி வரும் நாங்குநேரி வட்டார மகளிர் திட்ட குழு உறுப்பினர்களிடம் அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குறை களையும் கோரிக்கை களையும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார், பொறியாளர்கள் சபரி காந்த், மீனாட்சி, மேலாளர்கள் மலர், முருகப்பெருமாள், மகளிர் திட்ட குழு கலா மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.






