என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uyarvukku Padi"

    • நெல்லை கோட்டத்தில் முதல் கட்டமாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 368 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர் களும் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் 'உயர்வுக்கு படி' என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    நெல்லை கோட்டம்

    நெல்லை கோட்டத்தில் முதல் கட்டமாக எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் கோகுல் சிறப்புரையாற்றினார்.

    233 மாணவர்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிற்நுட்ப கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், குறுகியகால திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் என 17 கல்வி நிறுவனங்களும் கலந்து கொண்டன.

    சேரன்மகாதேவி கோட்டம்

    2-ம் கட்ட நிகழ்ச்சி சேரன்மகாதேவி கோட்டத்தில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் 368 மாணவர்களும், 12 கல்வி நிறுவனங்களும் கலந்து கொண்டன.

    இந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்ட த்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம் குறித்த தகவல்கள் அடங்கிய வழிகாட்டுதல் கையேடுகள் வழங்கப்பட்டது.

    மேலும் உயர்கல்வியில் சேருவதற்கு வங்கியினால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், தேவையான ஆவணங்கள், அரசு பணியில் சேருவதற்கான போட்டி தேர்வுகள், அதனை கையாளும் முறை, போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோ சனை வழங்கப் பட்டது. இத்தக வலை நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் மரியசகாய ஆன்டனி தெரிவித்துள்ளார்.

    ×