கூடங்குளம் அருகே வாலிபர் குத்திக்கொலை; நண்பர் கைது

மது அருந்தியபோது ஆல்பர்ட் எஸ்லின், சந்தனக்குமார் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கூடங்குளம் அருகே வாலிபர் குத்திக்கொலை; நண்பர் கைது
Published on

பணகுடி:

கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் எஸ்லின் (வயது24). டிரைவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (23) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

கடந்த 30-ந்தேதி இருவரும் அப்பகுதியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தனக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் ஆல்பர்ட் எஸ்லின் வயிற்றில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த ஆல்பர்ட் எஸ்லின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே கூடங்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சந்தனக்குமாரை கைது செய்து இருந்தனர். தற்போது ஆல்பர்ட் எஸ்லின் இறந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com