என் மலர்
கிரிக்கெட் (Cricket)
அதிரடியில் மிரட்டிய ஜாபர் ஜமால் - நெல்லை வெற்றிபெற 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி
- டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
- அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணி 146 ரன்களை எடுத்துள்ளது.
நெல்லை:
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் திருச்சி, நெல்லை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 6 ஓவர் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது தடைபட்டு 19 ஓவராக குறைக்கப்பட்டது.
திருச்சி அணியின் ஜாபர் ஜமால் தனி ஆளாகப் போராடி அரை சதமடித்தார். அவர் 53 பந்தில் 8 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 96 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், திருச்சி அணி 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்குகிறது.