search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது
    X

    வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி - பெண் கைது

    • ஸ்டெல்லா பேபி படித்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார்.
    • ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது என சிதம்பரத்திடம் ஸ்டெல்லா பேபி கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ஸ்டெல்லா பேபி (வயது 51). இவர் அப்பகுதியை 'டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார்.

    பட்டதாரி வாலிபர்

    இவர் படித்த இளைஞர்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். இந்நி லையில் தியாகராஜ நகரை சேர்ந்த பட்டதாரி வாலிபரான சிதம்பரம் (27) என்பவர் ஓமன் நாட்டு வேலைக்காக ஸ்டெல்லா பேபியை அணுகி உள்ளார்.

    அப்போது அவர் சிதம்பரத்திடம் ஓமன் நாட்டில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை உள்ளது. தினமும் 8 மணி நேரம் தான் வேலை, ரூ. 2 லட்சம் தந்தால் உன்னை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார். ஸ்டெல்லா பேபி கூறியதை நம்பி சிதம்பரம் ரூ.2 லட்சம் கொடுத்து ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு அவருக்கு தினமும் 12 மணி நேரம் வேலை வழங்கப்பட்டதோடு மாதம் ரூ.25 ஆயிரம் தான் சம்பளம் தருவோம் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் சொந்த ஊர் திரும்பினார்.

    மேலும் தன்னை ஏமாற்றி ரூ.2 லட்சம் மோசடி செய்த ஸ்டெல்லா பேபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாபேபியை கைது செய்தனர்.

    Next Story
    ×