என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டனர்.
    • பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் விதமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டு உள்ளூர் சந்தை பொருட்களை பயன்படுத்துவதன் முக்கி யத்துவத்தை வெளி ப்படுத்தும் விதமாகவும், அயல்நாட்டுப் பொருட்களை தவிர்ப்போம் என்றும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ரெயில்வே ரோட்டில் நேரடியாக சென்றனர்.

    பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். உள்ளூர் சந்தை பொரு ட்களின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சோமசுந்தரம் பேசினார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா, 9-வது என்.சி.சி குழுவின் சுபைதார் தசரதன், கவில்தார் சதீஷ், தலைமை ஆசிரியர் உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி. ஒருங்கி ணைப்பாளர் செல்லத்துரை, முதுகலை ஆசிரியர்கள் மதன்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • மிக்கேல் போஸ்கோ அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உள்வாய் நாகல்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மிக்கேல் போஸ்கோ (வயது 29). தொழிலாளி. இவர் சம்பவ த்தன்று அங்குள்ள மிக்கேல் அதிதூதர் கெபியில் மண்ணை அள்ளி போட்டுள்ளார். இதைப்பார்த்த அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சேசுமிக்கேல் மகன் ஜெபஷ்டின் (25), மிக்கேல் போஸ்கோவை கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜெபஷ்டின், மிக்கேல் போஸ்கோவை கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார்.

    இதுபற்றி மூலை க்கரைப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுதொடர்பாக ஜெபஷ்டினை தேடி வருகின்றனர்.

    • கொலை வழக்கில் நாங்கள் கொடுத்த புகார் மனுவை விசாரித்து அதன்படி வழக்குப்பதிவு செய்ய மறுத்து வருகிறார்கள்.
    • விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த மேலநத்தம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவர் கடந்த 4-ந்தேதி இரவு சந்திப்பு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந் போது ஒரு கும்ப லால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    உடலை வாங்க மறுப்பு

    இது தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல நத்தம் பகுதியில் வசிக்கும் கண்ணன், சுடலை கண்ணு, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களது பெயரை வழக்கில் சேர்க்கும் வரை மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று 5-வது நாளாக அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் இன்று மாயாண்டியின் தந்தை பலவேசம், மாயாண்டியின் மனைவி மாரிச்செல்வி, அவரது 2 மகன்கள் உள்ளிட்டோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆர்.டி.ஓ. கார்த்திகேயினியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்

    சந்திப்பு போலீசார் எனது மகன் கொலை வழக்கில் நாங்கள் கொடுத்த புகார் மனுவை விசாரித்து அதன்படி வழக்குப்பதிவு செய்ய மறுத்து வருகிறார்கள். இதனால் மீண்டும் எனது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

    காவல்துறை அதிகாரிகளிடம் ஊர் பிரமுகர்கள் வலியுறுத்தியும் வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்து வருகிறார்கள். இந்த விசாரணையில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனவே நாங்கள் கொடுத்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கலெக்டர் கார்த்திகேயனிடம் இது தொடர்பாக முறையிட்டு சென்றனர். கோர்ட்டு மூலமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை என்று வலியுறுத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • வெங்கடாசலபுரம் கிணற்றில் இருந்து அளவந்தான்குளம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர்கள் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சுசிலா பீட்டர் என்பவர் பணி புரிந்து வருகிறார். வெங்கடாசலபுரம் கிணற்றில் இருந்து அளவந்தான்குளம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் அமைக்க ஊராட்சி ஒன்றிய செயல் முறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அலவநதான்குளம் கிராமத்திற்கு என்று தனியாக பைப்லைன் அமைக்க கூடாது என்று நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த காலங்கரையான் என்பவரின் தலைமையின் கீழ் நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மானூர் போலீஸ் நிலையத்தில் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.
    • வாகன சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது

    களக்காடு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரி பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார்.

    காரில் ஏற்றி

    நாங்குநேரி அருகே அரசு பஸ் சென்றபோது, அதன் குறுக்காக ஒரு கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து இறங்கிய 2 பெண்கள் உள்பட 4 பேர் பஸ்சுக்குள் சென்றனர்.

    அவர்கள் வழுக்கட்டாயமாக கயத்தாறு இளம்பெண்ணை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இதுதொடர்பாக அப்பகுதியில் நின்றவர்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். கார் குறித்து நெல்லை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, வாகன சோதனை நடத்தப்பட்டது.

    கடத்தியது ஏன்?

    கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே நடந்த சோதனையின்போது காரில் இளம்பெண் கடத்தி கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களை நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் இளம்பெண்ணை கடத்தியது ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, கயத்தாறு பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும், கணவர் இறந்து விட்ட நிலையில் திடீரென உடல் நலக்குறைவுக்குள்ளான குழந்தையை திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்ததும் தெரியவந்தது.

    4 பேரிடம் விசாரணை

    அப்போது அங்கிருந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதும், அவரை பார்க்கவே தற்போது இளம்பெண் பஸ்சில் குமரிக்கு சென்றதும் விசா ரணையில் தெரிய வந்தது.

    அந்த வாலிபரை பார்க்க கூடாது என்பதற்காகவே, அந்த இளம்பெண்ணை அவரது உறவினர்கள் இழுத்து சென்றுள்ளனர் என்பதை போலீசார் அறிந்த னர். இதுகுறித்து போலீசார் இளம் பெண்ணின் உறவி னர்கள் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
    • சோதனையில் வீட்டில் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    பாளை காவல் நிலைய தலைமை காவலர் பெக்கின் அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த தலைமை காவலர், 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் அவர்கள் சந்திப்பு சிந்துபூந்துரை கீழத்தெருவை சேர்ந்த பாஸ்கர் (வயது 25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா பதுக்கி விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
    • மாணவர்கள் 3 பேரும் செல்போன் பயன்படுத்தியதாகவும் அதனாலேயே ஆசிரியர்கள் திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    பாளை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலை ப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    அப்போது அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், தங்களை ஆசிரியர்கள் தாக்கியதாக கூறினர்.இது தொடர்பாக பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்வில் தோல்வியடைந்ததால் ஆசிரியர்கள் தங்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் 3 பேரும் கூறினர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் கூறுகையில், மாணவர்கள் 3 பேரும் பள்ளி விதிகளை மீறி செல்போன் பயன் படுத்தியதாகவும், வீடி யோக்கள் பதிவிட்டதாகவும், அதன் காரணத்தினாலேயே ஆசிரியர்கள் அந்த மாணவர்களை திட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இரு தரப்பினரும் கூறும் தகவல்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஒட்டி வனத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    • களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

    இந்த திருவிழாவின் போது ஏராளமான பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு முன்பே கோவில் அருகே குடில் அமைத்து தங்குவார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி வனத்துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கோவில் பராமரிப்பு பணி சம்பந்தமாகவும், வனப்பகுதிகளில் வன விலங்கு பாதுகாப்பு மற்றும் மனித, வன விலங்கு மோதலை தடுக்கும் விதமாகவும், சரணாலயம் சுத்தம் செய்யும் பணிக்காக பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி வருகிற 13, 14-ந்தேதிகளில் மூடப்படுகிறது. இதற்காக வருகிற 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 9 நாட்கள் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.இந்த தகவலை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட இணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கள ஆய்வின்போது கோவில் அருகில் செல்லும் மின்பாதையை பாதுகாப்பான இடைவெளியுடன் சற்று உயர்த்துவதற்கு சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவுப்படி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி ஆகியோர் ஆலோசனையின் பேரில் இளநிலை பொறியாளர் விஜயராஜ் தலைமையில் பணியாளர்களால் உடனடியாக மின்வயர்கள் உயர்த்தப்பட்டது.

    • ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர்.
    • வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி(வயது 55). இவரது தங்கையின் மகன் ஆதிநாராயணன்(32).

    இவரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், முத்துக்குட்டியின் மகளுக்கும் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். மாமனார்-மருமகன் 2 பேருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் 2 பேரும் நேற்று மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்தனர். சிறிது நேரத்திலேயே ஒருவரையொருவர் அரிவாளால் மாறி மாறி வெட்டிக்கொண்டனர். உடனே அங்கிருந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வி.கே.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.
    • கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.


    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் குடியிருப்பு வாசிகள் கழுத்தில் தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்தபடி வந்து மனு அளித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடபுறம் உள்ளிட்ட பகுதி களில் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பா சாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.

    ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவருடன் வந்திருந்த செயின்ட் பால்ஸ் நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்க தலைவர் சாம் சுந்தர் ராஜா, செயலாளர் சங்கர நாராயணன், பொருளாளர் முருகேசன், உப தலைவர் மனோகரன், துணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு பகுதி சாலையானது 15 வருடங்களுக்கும் மேலாக மோசமாக இருந்து வந்தது. தற்போது புதிய தார் சாலை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக அமைக்கப்பட்ட சாலை சற்று உயர்ந்துள்ளதால் அதன் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட தெருவில் பாதாள சாக்கடை இல்லாததால் கழிவு நீர் திறந்த வெளி சாக்கடையில் விடப்படு கிறது.

    இதனால் ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அதேபோல் சாக்கடைக்கு மேல் நான்கு இடத்தில் ரோடு பாலம் உள்ளது. அந்த பாலங்கள் இடிந்துள்ளதால் சாக்கடை வெளியே வர முடியாமல் இருக்கிறது. எனவே சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான சாலையில் மழைநீர் தேங்கும் நிலையில் சில சாலையில் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். இலந்தைகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வருவதால் குளம் மேடாகி விட்டது. அதனையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது.
    • வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. வட மாநிலங்களில் ஏற்பட்ட பெருமழை காரணமாகவும், உள்ளூரில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் தொடர்ந்து காய்கறியின் விலை அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தொடர்ந்து படிப்படியாக தக்காளி விலை குறைய தொடங்கியது. வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.

    இந்நிலையில் இன்று தக்காளி விலை திடீரென கிலோ ரூ.30 வரையில் உயர்ந்தது. இன்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.1,900-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு பெட்டி ரூ.2,800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் இஞ்சி விலை ரூ.250 முதல் 280 வரையிலும், ஒரு கிலோ பல்லாரி ரூ.25 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.35 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    • குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
    • பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர்.

    இதனையடுத்து நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

    இதில் மானூர் யூனியன் கவுன்சிலர் முபின் முகமது இஸ்மாயில், பாளை யூனியன் கவுன்சிலர் ராஜாராம், திருவேங்க டநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கும ரேசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் கவிதா, நிர்வாகிகள் சந்தி ரசேகர், ஆவுடையப்பன், தி.மு.க. கிளை செயலாளர் குன்னத்தூர் ராஜகோபால், வேலாயுதம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×