என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு மனிதசங்கிலியில் கலந்து கொண்ட மாணவர்கள்.
நெல்லை ம.தி.தா. பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
- பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டனர்.
- பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதை ஊக்குவிக்கும் விதமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 93 பேர் கலந்து கொண்டு உள்ளூர் சந்தை பொருட்களை பயன்படுத்துவதன் முக்கி யத்துவத்தை வெளி ப்படுத்தும் விதமாகவும், அயல்நாட்டுப் பொருட்களை தவிர்ப்போம் என்றும் எழுதப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ரெயில்வே ரோட்டில் நேரடியாக சென்றனர்.
பேரணியை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் உலகநாதன் தலைமை தாங்கினார். உள்ளூர் சந்தை பொரு ட்களின் முக்கியத்துவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சோமசுந்தரம் பேசினார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா, 9-வது என்.சி.சி குழுவின் சுபைதார் தசரதன், கவில்தார் சதீஷ், தலைமை ஆசிரியர் உலகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை என்.சி.சி. ஒருங்கி ணைப்பாளர் செல்லத்துரை, முதுகலை ஆசிரியர்கள் மதன்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






