என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Market Situation"
- கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது.
- வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.
நெல்லை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. வட மாநிலங்களில் ஏற்பட்ட பெருமழை காரணமாகவும், உள்ளூரில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் தொடர்ந்து காய்கறியின் விலை அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ தொட்டது. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் தொடர்ந்து படிப்படியாக தக்காளி விலை குறைய தொடங்கியது. வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.70- ஆக குறைந்தது.
இந்நிலையில் இன்று தக்காளி விலை திடீரென கிலோ ரூ.30 வரையில் உயர்ந்தது. இன்று ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு பெட்டி தக்காளி ரூ.1,900-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரு பெட்டி ரூ.2,800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதே போல் இஞ்சி விலை ரூ.250 முதல் 280 வரையிலும், ஒரு கிலோ பல்லாரி ரூ.25 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.35 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.