என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-ம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதியாக பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 2 வருட தொழிற்கல்வி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. 2-வதாக உடற்தகுதி தேர்வும், 3-வதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

    இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார்.
    • ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்- பெண் மின்னொளி கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது.

    போட்டி தொடக்கம்

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து விளையாட்டு, வீரர்களை ஆர்.எஸ்.பாரதிக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

    ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது. இதில் அரியானா அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர் அணியும் விளையாடியது இதில் அரியானா அணி வெற்றிபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    போட்டி தொடக்க விழாவில் ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ் தங்கையா கணேசன், ஜி.பி.எம்.குமார், நவ்வலடி சரவணகுமார், அப்புவிளை மகேஷ்வரன், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து கபடி வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    • படுகாயம் அடைந்த முத்துக்குட்டி நெல்லை அரசு மருத்துவமனையிலும், ஆதி லெட்சுமணன் அம்பை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குட்டி(வயது 56). இவரது மகளை, அதே பகுதியை சேர்ந்த தர்மர் மகன் ஆதி லெட்சுமணன் (38) என்பவர் திருமணம் செய்துள்ளார்.

    இவர்களது மகன் தருண் (7). சம்பவத்தன்று தருணை முத்துக்குட்டி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதை அறியாத ஆதி லெட்சுமணன் தனது மகன் மாயமானதாக நினைத்து தேடி உள்ளார். பின்னர் உண்மை அறிந்ததும் இதுகுறித்து மாமனார் முத்துக்குட்டியிடம் கேட்டுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் அரிவாளால் மாறி, மாறி வெட்டிக்கொண்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த முத்துக்குட்டி நெல்லை அரசு மருத்துவமனையிலும், ஆதி லெட்சுமணன் அம்பை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக வி.கே.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரை யையொட்டி அமைந்துள்ள புளியந்தோப்பு தெருவில் நத்தம் புறம்போக்கு பகுதியில் 130 வீடுகள் உள்ளன.
    • புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ஆற்றங் கரை யோர ஆக்கிரமிப்பு களை அகற்று வதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரை யையொட்டி அமைந்துள்ள புளியந்தோப்பு தெருவில் நத்தம் புறம்போக்கு பகுதியில் 130 வீடுகள் உள்ளன.

    அடுக்குமாடி குடியிருப்பு

    புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ஆற்றங் கரை யோர ஆக்கிரமிப்பு களை அகற்று வதற்கு மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அந்த புளியந்தோப்பு தெருவில் வசிக்கும் குடும்பத்தினரை, குடிசை மாற்று வாரியம் சார்பில் ரெட்டியார்பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இது தொடர்பாக கடந்த 2 வருடங்களாக அதிகாரிகள், மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று புளியந்தோப்பில் குடியிருக்கும் மக்களை ரெட்டியார்பட்டியில் கட்டப்பட்டிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகளை பார்வையிட வருமாறு அழைப்பு விடுப்பதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாங்கள் பல வருடங்களாக இங்கேயே வசித்து வருவதால் இந்த பகுதி தான் நாங்கள் குடியிருப்பதற்கு வசதியாக உள்ளது. நாங்கள் பல லட்சங்கள் செலவு செய்து இங்கே வீடுகளை கட்டி உள்ளோம்.

    எனவே இங்கிருந்து வேறு குடியிருப்புகளுக்கு இடமாற மாட்டோம். அவ்வாறு இடமாற்ற நடவடிக்கை மேற்கொண்டால் தற்கொலை செய்து கொள்வோம் என கூறி கையில் டீசல்கேன், தூக்குகயிறு, எறும்புபொடி பாக்கெட்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதோடு அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    போலீசார் பேச்சுவார்த்தை

    இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேசியதை தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தி.மு.க. பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணி யன் மூலம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கானிடம் ஒரு மனு கொடுத்திருந்தனர்.

    அதில், தங்களை இந்த பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

    • 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது

    நெல்லை:

    2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர விட்டுள்ளது. அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    மேற்கூறிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 200 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.

    • களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி களக்காடு வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறையினர் பத்ம நேரி பீட் பகுதியில் ரோந்து சென்றனர்.

    கடமான்

    அப்போது அங்குள்ள கிணற்றில் கடமானின் தலை, எழும்புகள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்ததை கண்டு அவைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஸ்டீபன்ராஜ், (30), முத்துராஜ் மகன் ராஜாசிங் (27), தங்கத்துரை மகன் ரவிக்குமார் (27), குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த முவின் (40) உள்பட சிலர் பழத்தில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்து கடமானை வேட்டை யாடி கறியை வெட்டி பங்கு போட்டதும், மீதி இறைச்சியை காரில் எடுத்து சென்று விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து ரவிக்குமார், ராஜாசிங் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் வனத்துறையினர் தலையணை தங்கும் விடுதியில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் தலையணை சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். வனத்துறை அதிகாரிகள் சென்ற ஜீப்புகளை யும் அவர்கள் மறித்துள்ளனர்.

    கோர்ட்டில் ஆஜர்

    இது குறித்து வனத்துறை அளித்த தகவலின் பேரில் பாதுகாப்புக்கு களக்காடு போலீசார் விரைந்து சென்றனர். இதையொட்டி தலையணை மூடப்பட்டது. மாலை வரை தலையணை திறக்கப்பட வில்லை. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் தலையணைக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற த்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே விசாரணைக்கு பின் இருவரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் இதில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ், முவின் உள்ளிட்ட கும்பலை வனத்துறை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ராஜாசிங் புதுமாப்பிள்ளை ஆவார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்ட கடமான் வயிற்றில் குட்டி இருந்துள்ளது. அதனை கொடூரமான முறையில் கீறி வெளியே எடுத்த கும்பல் கடமானின் பாகங்களுடன் குட்டியின் உடலையும் கிணற்றில் வீசிய நிலையில் போலீசில் சிக்கி உள்ளனர்.

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.

    உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.

    • படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றபோது, அங்கு புகுந்த மர்மநபர்கள் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதனைப்பார்த்த அவர்களுடைய சின்ன தாத்தா கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னத்துரை தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் நேற்று பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும், என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

    நெல்லை:

    தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க பிரேமலதா ஆலோசனைப்படி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும், என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும், கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நீர் ஆதாரத்தை உடனடியாக திறந்து விட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம், புறநகர் மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த மணி, மாவட்ட பொருளாளர் மாடசாமி துணைச் செயலாளர்கள் சின்னத்துரை, பழனி குமார், செல்வகுமார், வனிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலைவாணன், பாலகிருஷ்ணன், தச்சைப்பகுதி செயலாளர் ராஜ், பாளைப்பகுதி செயலாளர் ஆரோக்கிய அந்தோணி, மேலப்பாளையம் பகுதி செயலாளர் குதுப்புதீன், நெல்லை பகுதி செயலாளர் மணிகண்டன், மானூர் தெற்கு ஒன்றியம் வேல் பாண்டி, மானூர் வடக்கு ஒன்றியம் சின்னத்தம்பி, நாரணமாள்புரம் பேரூர் செயலாளர் சின்ன பாண்டி, சங்கர் நகர் பேரூர் செயலாளர் அரியநாயகம் உட்பட நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சென்னை, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார்.

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

    நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-ல் கொண்டுவரப்பட்டாலும் தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. இந்த திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முக்கிய கொலையாளியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
    • வீரவநல்லூர் பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் 1-வது தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பண்ணையார் குமார் என்ற அருணாசலகுமார் (வயது 42). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் செங்கல் சூளையும் நடத்தி வந்தார். மேலும், பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர் உள்ளிட்டவற்றை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார்.

    இவருடைய மனைவி துர்க்கா தேவி. இவர்களுக்கு கருப்பசாமி, முருகன் ஆகிய 2 மகன்களும், மனிஷா என்ற மகளும் உள்ளனர். நேற்று மாலை அவர் வீற்றிருந்தான்குளம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 5 மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 மோட்டார் சைக்கிள்களில் பின்தொட ர்ந்து விரட்டிச் சென்றனர்.

    உடனே அருணாசலகுமார் செல்போனில் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவாறே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு காட்டுப்பகுதியில் தப்பியோடவே, அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார் மற்றும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருணாசலகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீரவநல்லூர் யாதவர் தெருவை சேர்ந்த கார்த்திக்(24) என்பவரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    முக்கிய கொலையாளியான கார்த்திக் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. அவர் நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் கார்த்திக்கை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதால், அவரது பெற்றோர் கார்த்திக் குறித்து சிலரிடம் விசாரித்துள்ளனர்.

    அதேபோல் தற்போது கொலை செய்யப்பட்ட அருணாசல குமாரிடமும் விசாரித்துள்ளனர். அதற்கு கார்த்திக் குடிப்பழக்கம் உள்ளவர் என்று அருணாசல குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை இளம்பெண் தனது காதலரான கார்த்திக்கிடம் கூறிவிட்டார். இதனால் அருணாசலகுமார் மீது கார்த்திக் ஆத்திரம் அடைந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வீரவநல்லூர் பகுதியில் நடந்த ஒரு கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை அருணாசலகுமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனாலும் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(21), முத்துராஜ்(19), வசந்த்(21), கொம்பையா(23) ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கார்த்திக் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்டு கொலைக்கான காரணங்கள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
    • காயம் அடைந்த 3 மாணவர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 3 மாணவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சையில் சேர்ந்தனர். அவர்கள் தங்களை பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் கூறினர். அந்த மாணவர்களுக்கு கண் உள்ளிட்ட பாகங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக பாளை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை கம்பால் அடிக்கும் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பாளை அரசு உதவி பெறும் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.

    அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி(வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் நடந்த மதிப்பீட்டு தேர்வில் பர்கிட் மாநகரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். அதனால் ஆங்கில ஆசிரியர் அந்த மாணவரை அடித்துள்ளார்.

    இந்த காட்சிகளை அதே வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பரவ விட்டனர். இந்த தகவல் ஆசிரியர் கிங்ஸ்லிக்கு தெரியவரவே, வீடியோ எடுத்த 2 மாணவர்களை தனியாக அழைத்து சென்று அடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த 3 மாண வர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பாளை போலீசார், ஆசிரியர் கிங்ஸ்லி மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் கிங்ஸ்லியை 'சஸ்பெண்டு' செய்து பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் உத்தரவிட்டார்.

    ×