search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarada College"

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது.
    • சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்பா ஆலோ சனையின்படி கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் அறிமுக உரையாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ புரொபுல்ஷன் காம்ப்லெஸ் துணை பிரிவு தலைவர் லிபோநா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு களை வழங்கினார். முடிவில் பார்வதி தேவி நன்றி கூறினார். 

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
    • கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பவப்ரியா அம்பா ஆசியுடன், கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திர சேகரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் கமலா தலைமையில் நடந்தது. கணிதவியல் துறை தலைவர் ரேவதி வரவேற்று பேசினார்.

    கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி (சுயநிதி பிரிவு) கணிதவியல் துறையின் தலைவர் முத்துகுமாரி சிறப்புரையாற்றினார். முதுகலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி திவ்யா நன்றி கூறினார்.

    • பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.

    உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சாரதா மகளிர் கல்லூரியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகாதாரத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்கினார்.

    நெல்லை:

    பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி யில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல இயக்ககம் இணைந்து நடத்திய மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரிச் செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுடனும், இயக்குநர் சந்திரசேகரன் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக நலப்பணிகள் இணை இயக்குநர் லதா தலைமை உரை ஆற்றினார்.

    மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் துணை இயக்குநர் ராமநாதன் சுகா தாரத்தை எவ்வாறு பாது காப்பது குறித்த விழிப்பு ணர்வை மாண வர்களுக்கு வழங்கினார்.

    மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகா, பெண்கள், சிறுமிகளின் ஆரோக்கியம் மற்றும் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவி ஸ்ரீசங்கினி மக்கள் தொகை பெருக்கமும் வருங்கால இந்தியாவும் என்ற தலைப்பில் தனது கருத்துகளை பகிர்ந்தார். மாவட்ட விரிவாக்க கல்வி யாளர், மாவட்ட குடும்பநல இயக்ககம் ஜெயசித்ரா நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களும், பேராசிரி யர்களும் கலந்து கொ ண்டனர். நிகழ்ச்சியின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பொருளியல்துறை மற்றும் வணிக நிர்வாகத் துறை பேராசிரியைகள் இணைந்து செய்திருந்தனர்.

    • நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது.
    • நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான வளாக நேர்காணலை ஆரோ லேப் பயிற்சி மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு ஏற்பாடு செய்தது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஆரோ லேப் பிரிவு மேற்பார்வையாளர் தேவி மற்றும் லைன் இன்சார்ஜ் வனஜா ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.

    பின்னர் ஆரோ லேப் அனைத்து இறுதி ஆண்டு இளங்கலை மாணவிகளுக்கும் எழுத்து தேர்வை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக விருப்பமுள்ள மாணவிகள் தனிப்பட்ட நேர்காணலில் பங்கேற்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்ற 44 மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    பயிற்சி, மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு டீன் ரேவதி நன்றி கூறினார். வேலைவாய்ப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மிருணா தேவி, பொருளாதார துறை உதவி பேராசிரியை மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுடர்வேணி என்ற சுபா, எஸ்.அனு நித்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

    • ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி-பாளை சாரதா மகளிர் கல்லூரி இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர்.
    • 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாளை சாரதா மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை இணைந்து 2 நாட்கள் சர்வதேச மாநாடு நடத்தினர். முதல் நாள் நிகழ்ச்சி சாரதா மகளிர் கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கியது. ஆங்கிலத்துறை தலைவர் ரேணுகா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.

    கல்லூரிமுதல்வர் கமலா, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜாஸ்மின் ஆண்ட்ரூஸ் கவுரவ உரையாற்றினர். பேராசிரியர் பிரபாகர் மாநாட்டின் தலைப்பான "நாடு கடந்த இலக்கியத் தன்மை" பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் அரசியல் அமைப்புகளை நாம் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார். இதில் 26 கல்லூரிகளில் இருந்து 498 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியர் அழகிய நாயகி நன்றி கூறினார்.

    2-வது நாள் நிகழச்சியில் சிறப்பு விருந்தினரான பேராசிரியர் டெரிபுல்லர் "சமகால இலக்கியத்தில் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் பற்றிய பிரதிபலிப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சவுஜீனியா தர்ம சங்கரன் (ஓய்வு) சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் பேராசிரியர் ரேணுகா நன்றி கூறினார்.

    • தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை சாரதா கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனுஷா வரவேற்று பேசினார்.

    போட்டிகள்

    கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவதன் காரணம் குறித்து விளக்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காந்தி கிராம் கிராமப்புற நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் ரூபா ஹரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.

    விழாவில் கல்லூரி மாணவிகள் பூரணி, சந்தியா, ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். மேலும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் கல்லூரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுபஜோதி நன்றி கூறினார்.

    விளையாட்டு விழா

    இதேபோல் கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தி னை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாரதா கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்பிரியா, கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் கிள்ளிகுளம் வேளாண் ஆராய்சி நிறுவனத்தை சேர்ந்த ஜூலியட் ஹெப்சிபா மற்றும் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார்.

    உடற்கல்வியியல் துறை பேரா சிரியர் வெயிலு முத்து ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளின் விழிப்பு ணர்வு அணிவகுப்புகள் மற்றும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிககள், நடை பெற்றது. தொடர்ந்து பார்வையாளர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி நன்றி கூறினார்.

    • நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக, நெல்லை அகில இந்திய வானொலியின் பண்பலை பகுதி நேர அறிவிப்பாளர் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    நெல்லை:

    நெல்லை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை பொதிகை இலக்கிய மன்றத்தின் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதிகை இலக்கிய மன்றத்தின் துணைத்தலைவரும், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கார்த்திகா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் கமலா தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக, நெல்லை அகில இந்திய வானொலியின் பண்பலை பகுதி நேர அறிவிப்பாளர் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார். அவர் தம் சிறப்புரையில், பெண்கள் தன்னம்பிக்கை கொண்டு சாதித்த வரலாறுகளை எடுத்துக் கூறி மாணவியரை சாதிக்கத் தூண்டினார். மேலும் அவர் மாணவியர் தம் அறிவை கூர்மையாக்கி தெளிவான சிந்தனை கொண்டு சீரிய செயலாற்றிட வேண்டுமென அறிவுறுத்தினார்.

    தமிழ்த்துறைத்தலைவர் தனலெட்சுமி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சிந்து ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பொதிகை இலக்கிய மன்றத்தின் செயலர், இளநிலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
    • ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் மாணவர் பேரவை இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தது.

    மாணவர் பேரவையின் மாணவியத்தலைவி ரங்க ப்ரியங்கா வரவேற்று பேசினார். கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவப்பிரியா அம்பா ஆசிரியர்களின் பழமையான, நிகழ்கால மற்றும் எதிர்கால சூழல் விழுமியங்களை மேற்கோள் காட்டி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.

    கல்லூரி முதல்வர் கமலா தொடக்க உரையாற்றினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அன்றைய வரலாற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்து ஒருங்கிணைந்த செயல்முறையாக கற்பித்தல் மற்றும் கற்றல் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

    ஆசிரியர்களுக்கு அதிர்ஷ்ட விளையாட்டு நடத்தப்பட்டது.

    நிறுவனத்தின் இயக்குனர் பங்கேற்பாளர்களை வாழ்த்தி மாணவர்கள் மற்றும் அறிஞர்களை சமூக பொறுப்புணர்வோடு கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் விரிவாக்கம் பயிற்சிக்கு மாற்றும் பணியில் ஆசிரியர்களின் தற்போதைய பங்களிப்பை சிறப்பித்து அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    • அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது
    • ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நெல்லை:

    அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை முதல்வர் கலாவதி வரவேற்றார். செயலர் யதிஷ்வரி சரவணபவபிரியா அம்பா முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். கல்வி மேம்பாட்டு கேந்திரத்தின் தமிழ் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

    நிகழ்ச்சியின் மையமாக காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் லஷ்மி கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி மேம்பாட்டு கேந்திரம் மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தை கல்லூரி செயலரிடம் இருந்து சாரதா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் சாருலதா பெற்றுக்கொண்டார். 2-வதாக ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் நன்றி கூறினார்.

    • கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
    • மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத்தை யொட்டி 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் பொருண்மையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரியின் செஞ்சுருள் இயக்கமும், இளைேயார் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

    கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவ ப்ரியா அம்பா ஆசியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வரும், பொருளியல் துறை தலைவருமான கலாவதி வரவேற்று பேசினார். கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    நெல்லை சித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியரான கோமலவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

    தொடர்ந்து மாணவிகளோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியருமான உஷா நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியினை மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரியின் செஞ்சுருள் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவிகளும், இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகளும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

    • பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
    • பயிற்சியில் கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்பபட்டன.

    நெல்லை:

    பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவும், பயிற்சி மற்றும் மேம்பாட்டு குழுவும் இணைந்து பேராசிரியர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கணிதவியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் இந்திராணி தொடக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற என்.எல்.சி. பொது மேலாளர் நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்ப பட்டன.

    முடிவில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை தலைவருமான ரேணுகா நன்றி கூறினார். உதவி பேராசிரியர் ஜானகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    ×