சாரதா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.பயிற்சியில் கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்பபட்டன.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்த போது எடுத்தபடம்.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்த போது எடுத்தபடம்.
Published on

நெல்லை:

பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவும், பயிற்சி மற்றும் மேம்பாட்டு குழுவும் இணைந்து பேராசிரியர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கணிதவியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் இந்திராணி தொடக்கவுரை யாற்றினார்.

சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற என்.எல்.சி. பொது மேலாளர் நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்ப பட்டன.

முடிவில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை தலைவருமான ரேணுகா நன்றி கூறினார். உதவி பேராசிரியர் ஜானகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com