என் மலர்
நீங்கள் தேடியது "Chandrayaan Victory Celebration"
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது.
- சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்பா ஆலோ சனையின்படி கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ புரொபுல்ஷன் காம்ப்லெஸ் துணை பிரிவு தலைவர் லிபோநா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு களை வழங்கினார். முடிவில் பார்வதி தேவி நன்றி கூறினார்.






