search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Memorandum of Understanding"

    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
    • தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.

    தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.


    அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் முதலமைச்சர் அவர்களை 31.1.2024 அன்று சந்தித்துப் பேசினார்கள்.

    இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

    அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்துப் பேசினார்.

    இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

    இச்சந்திப்பின்போது, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (Guidance) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் அலுவலர் திரு.வே.விஷ்ணு, ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்கொரியாவிலுள்ள ஐ.என்.சி.ஹச்.இ. என்ற நிறுவனத்திற்கும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் கல்லூரிகளான போப் கல்லூரி, சாயர்புரம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார்.

    கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். திமோத்தி ரவீந்தர் தலைமை உரையாற்றினார். இதனையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென்கொரியா ஐ.என்.சி.ஹச்.இ. இயக்குனர் கிம், போப் கல்லூரி செயலர், தநீகர் பிரின்ஸ் கிப்சன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஐ.என்.சி.ஹச்.இ. மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் நன்றி கூறினார். இம்மானுவேல் வான்ஸ்றக் இறுதி ஜெபம் செய்தார். பேராசிரியர்கள் ஜீவராணி தங்கம், பிரிங்கிள் குயின்ஸ்டா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் போப் கல்லூரி வேதியல் துறை உதவி பேராசிரியை கரோலின் டெய்சி, உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் குட்டி ஜாஸ்கர், சாந்தினி கிரேஸ், ஆசீர், தினகர், கிறிஸ்டோபர், பொன்சாம், மரிய ஜெயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயோ ஆராய்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு எனும் தலைப்பில் ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக சன் பயோ நேச்சுரல்ஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தாளாளர் டாக்டர் சேது குமணன், சன் பயோ நேச்சுரல்ஸ் நிறுவன அதிகாரி சக்திவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    கல்லூரியின் கூட்ட அரங்கில் பயோ ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சி கட்டுப்பாடு குறித்த விவாதம் நடந்தது. வேப்பங்கொட்டையில் இருந்து எண்ணெய் தயாரிப்பது, மூலப்பொருட்களை எவ்வாறு சேமிப்பது குறித்து விவாதம் நடந்தது. உதவி பேராசிரியர் கருப்புராஜ், ஆர்கானிக் உரம் தொழில்நுட்பத்தை பற்றியும், பூச்சியல் இணை பேராசிரியர் விஷ்ணுபிரியா, ஆர்கானிக் பூச்சிக்கொல்லி பற்றியும் பேசினர். இதில் கல்லூரி தாளாளர் சேதுகுமணன், பயோ நேச்சுரல்ஸ் சக்திவேல், ஆடிட்டர் எழில், இயக்குநர் கோபால் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது

    கரூர் :

    கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு முன்னிலையில் சிங்கப்பூரில் உள்ள நிறுவனமான ஆக்ஸ் கன்சல்டன்சியுடன் இரண்டு வருடத்திற்கான சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணலின் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கவும், மேலும் கல்லூரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஓப்பந்தத்தில் ஆக்ஸ் கன்சல்டன்சி நிறுவன இயக்குனர்கள் இந்து மற்றும் வெங்கடேஷ், எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் பாபு, கணினி பொறியியல் துறை தலைவி, முனைவர் திலகமணி மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்த ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
    • மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பாக முதல்வர் மலர்க்கண் மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்த பரிமாற்றம் செய்துகொண்டனர்.

    மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர். வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலா ண்மை துறையின் இணைநிலை பேராசிரியர் வைத்தீஸ்வரன் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.
    • கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அங்கமான கலை மற்றும் அறிவியல் வேதியியல் துறையும் தருமபுரி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான லக் பெயிண்ட்ஸ் இணைந்து நடத்து வேதியியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொழில் துறை பயிற்சி நடைபெற்றது.

    இதில் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றம் மேலான் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி, பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் துறை தலைவர்கள் கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேதியியல் துறையின் தலைவர் பேராசிரியை சாவித்திரி வரவேற்புரையாற்றினர். கலை மற்றும் அறிவியல் துறை தலைவர் டீன் முத்துலட்சுமி வாழ்த்துரை வங்கினார். வேலை வாய்ப்பு குறித்து தகவல்களை தொழில் துறை பயிற்சியாளர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.

    கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழத்திட்டு உறுதிப்படுத்தினார். முன்தாக வேதியியல் துறை பேராசிரியர் ராஜப்பா வரவேற்புரையாற்றினர். முடிவில் உதவி பேராசிரியை சரோஜ்பூரணி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் கார்த்திகேயன் மற்றும் உதவி பேராசிரியர் சிவராஜ் செய்திருந்தனர்.

    • திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
    • பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    திருச்சி :

    தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரிய பெருமைகொண்ட திருச்சி தேசியக்கல்லூரி மற்றும் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசியக்கல்லூரியில் கையெழுத்தானது. பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து ஆன்மீகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படை பயன் ஆகும்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் கரூர் ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யாதீஸ்வரி நீலகண்ட பிரியா, திருச்சி தேசியக்கல்லூரி செயலர் கே.ரகுநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் தேசியக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் கே.குமார் வரவேற்றார். சாரதா நிகேதன் கல்லூரி முதல்வர் முனைவர் என்.நாகதீபா சிறப்புரையாற்றினார்.

    இதில் பங்கேற்று பேசிய மாதாஜி, தேகம், தேசம், தெய்வம் இவற்றில் தேசம் என்பது தேசியக்கல்லூரி, தெய்வம் என்பது ஸ்ரீசாரதா நிகேதன் கல்லூரி, இந்த இரு கல்லூரிகளும் யெல்பாட்டில், கருத்துணர்வில் இணைந்தவை. மாணவர் நலன் காக்க நாம் இணைந்து செயல்படுவோம் என்றார். நிறைவில் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் கணேஷ் ராஜா நன்றி கூறினார்.

    • அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது
    • ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நெல்லை:

    அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை முதல்வர் கலாவதி வரவேற்றார். செயலர் யதிஷ்வரி சரவணபவபிரியா அம்பா முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். கல்வி மேம்பாட்டு கேந்திரத்தின் தமிழ் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

    நிகழ்ச்சியின் மையமாக காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் லஷ்மி கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி மேம்பாட்டு கேந்திரம் மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தை கல்லூரி செயலரிடம் இருந்து சாரதா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் சாருலதா பெற்றுக்கொண்டார். 2-வதாக ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் நன்றி கூறினார்.

    • ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் மற்றும் உயர் கல்வி கற்பதற்கும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மையில் இன்கார்பரேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி கல்வி நிறுவன தலைவர் பிஎஸ்கே பெரியசாமி தலைமையில் நடை பெற்றது.

    ஜப்பான் நாட்டைச்சார்ந்த டெக்னோ ஸ்மைல் இன்கார்பரேஷன் நிறுவன தலைவர் கென்யா அபே மற்றும் அந்நிறுவன ஆலோசகர் யாசுபுமிமேனகா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    மேலும் இந்நிகழ்வில் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன், கேட்வே டு ஜப்பான் பிரைடே லிமிடெட் நிறுவன தலைவர் சரவணன், ஜப்பான் டோக்கியோ நெக்ஸ்ட்ஜென் கார்பரேசன் இயக்குநர் ராஜேஸ்குமார் சங்கரலிங்கம், பொறியியல் கல்லூரி டீன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை யோகப்பிரியா, பொறியியல் கல்லூரி டீன் திட்டங்கள் மற்றும் ஆலோசனை துறை முனைவர் விஜயகுமார் மற்றும் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநர் ஸ்ரீதர் பங்கு பெற்றனர்.

    மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022-ம் ஆண்டு முதல் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கேட்வே டு ஜப்பான் பிரைவேட் லிமிடெட் மூலம் எளிதில் ஜப்பானிய மொழியை கற்கவும் மற்றும் டெக்னோ ஸ்மைல் இன்கார்ப்பரேஷன் மூலம் ஜப்பானில் உள்ள உயர்மட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்று தருவது பற்றியும் இடம் பெற்றிருந்தது.

    மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களிடையே மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகங்களுக்கு இடையே கல்விசார் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.125 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையப்பமிடப்பட்டன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019&ஐ முன்னிட்டு முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் பெரம்பலூரில் நடந்தது.

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன்  (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கலெக்டர் சாந்தா தலைமையில் 99 தொழில் முனைவோருக்கு ரூ.125 கோடியே 30 லட்சத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையப்பமிடப்பட்டன. தொழில் முனைவோருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கலெக்டர் சாந்தா வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், கடந்த 2017&18 மற்றும் 2018&19 ஆம் நிதி ஆண்டில் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில்,    மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாநில முதலீட்டு மானிய திட்டத்தில் 31 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.107 கோடியே 77 லட்சம் மானியமாகவும், குறைந்த அழுத்த மின் மானிய திட்டத்தில் 23 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3    கோடியே 17 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தி, சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் உற்பத்தி போன்றவற்றில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து வருகிறது. எனவே புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் உள்ள தொழில்         வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில் குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் ரவீந்திரன், சிட்கோ கிளை மேலாளர் அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி   மேலாளர் அருள், உதவி பொறியாளர் (தொழில்) சரவணன் ஆகியோர் பேசினர். முன்னதாக தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் (ரசாயனம்) முருகன் வரவேற்றார். முடிவில் மேலாளர் (கிராம தொழில் நிர்வாகம்) கஸ்தூரி நன்றி கூறினார். #tamilnews
    ×