search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pope College"

    • சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்தி பொன்இந்திரா தலைமை தாங்கி பேசினார்.

    தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை ஜெயசுதா வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை சகாய ஹென்சி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஹேமா நன்றி கூறினார். ஜெயராணி நிறைவு ஜெபம் செய்தார்.

    • மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது.
    • தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப ஒரு நாள் கருத்தரங்கு சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, கோவிந்தம்மாள் கலைக்கல்லூரி, பிஷப் கால்டுவெல் கலைக்கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி மற்றும் பல கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவு தலைவர் ஜெயசுதா பெர்சியா தலைமை தாங்கினார். கல்லூரி பொறுப்பு முதல்வர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    ஏ.பி.சி. மகாலட்சுமி கலைக்கல்லூரி கணித துறை விரிவுரையாளர் பெலிஸ்டா சுகிர்த லிசி, வாவு வஜுஹா வனிதையர் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் சிதி சமீலா, தூத்துக்குடி மென்பொருள் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கபட்டனர். சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை சகாய ஹென்ஸி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

    • ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்கொரியாவிலுள்ள ஐ.என்.சி.ஹச்.இ. என்ற நிறுவனத்திற்கும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் கல்லூரிகளான போப் கல்லூரி, சாயர்புரம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார்.

    கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். திமோத்தி ரவீந்தர் தலைமை உரையாற்றினார். இதனையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென்கொரியா ஐ.என்.சி.ஹச்.இ. இயக்குனர் கிம், போப் கல்லூரி செயலர், தநீகர் பிரின்ஸ் கிப்சன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஐ.என்.சி.ஹச்.இ. மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் நன்றி கூறினார். இம்மானுவேல் வான்ஸ்றக் இறுதி ஜெபம் செய்தார். பேராசிரியர்கள் ஜீவராணி தங்கம், பிரிங்கிள் குயின்ஸ்டா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் போப் கல்லூரி வேதியல் துறை உதவி பேராசிரியை கரோலின் டெய்சி, உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் குட்டி ஜாஸ்கர், சாந்தினி கிரேஸ், ஆசீர், தினகர், கிறிஸ்டோபர், பொன்சாம், மரிய ஜெயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வ குமார் தலைமை தாங்கினார். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவ சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் சாந்தினி இஸ்ரேல் வரவே ற்றார். இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் பேசிய தாவது:-

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் போய்விட்டோம். ஆனால் நமது பிள்ளைகள் படித்து, பெரிய ஆளாக வரவேண்டும் என பல்வேறு கனவுகளோடு உங்களை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதுவுமே கஷ்டப்படாமல் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி களை படித்து கொண்டே இருக்கும் இத்தரு ணத்தில் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல கூடாது. பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்ய கூடாது. மாணவிகளை கிண்டல் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

    தொட ர்ந்து அனைவரும் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த னர். நிகழ்ச்சியை ஆங்கில த்துறை மாணவிகள் மெர்சி, ஜெய பிரதிபா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளியல் துறை பேராசிரியர் ஜானகி மற்றும் சாம் ஆகியோர் நன்றி கூறினார். பேராசிரியர் மெர்லின் சலோமி நிறைவு ஜெபம் செய்தார்.

    ×