search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "skill development"

    • 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    • சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்றுனர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி கே.எஸ்.சி., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் திருப்பூர் தெற்கு வட்டார வள மையத்தில் நடைபெறுகிறது.

    முதல் நாளான இன்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, திருப்பூர் மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 ஒன்றிய வட்டார வள மையங்களில் பணியாற்றும் 54 சிறப்பு பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட சிறப்பு பயிற்றுனர்களுக்கு தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.  

    • பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
    • மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதி உதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியில் இருக்கும் ஆலங்குளம் வட்டாரத்தில் உள்ள அகரம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் முன்னிலையில் அனைத்து துறையின் பங்களிப்புடன் சமூகநிலை மாற்ற மேலாண்மை குழுவிற்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட்டது.

    இப்பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சரவணன் நெல் பயிரின் ரகங்கள், நெல் பயிரில் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் இணை பேராசிரியர் ரஜினிமாலா, நீர்வள, நிலவள திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்து கூறினார். இணை பேராசிரியர் ஆல்வின் தேனி வளர்ப்பு வழிமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தும் எளிய முறைகளை எடுத்து கூறினார்.

    லெட்சுமி தேவி, பாரம்பரிய நெல் வகைகளை பயிர் செய்து குறைந்த மகசூலில் போதிய லாபம் பெறும் வழிமுறைகள் மற்றும் அதன் குணாதிசயங்கள், முக்கியத்துவம் போன்றவற்றை கூறினார். மேலும் 59 நெல் பாரம்பரிய வகைகளை விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    கால்நடை உதவி அலுவலர் ராமசெல்வம் கால்நடை துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார். வேளாண்மை உதவி அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கஸ்தூரி கலந்து கொண்டு வேளாண்மைத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை எடுத்து கூறினார். நிகழ்ச்சியினை நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு மற்றும் அருண் சசிக்குமார் ஏற்பாடு செய்தனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராம புறங்களில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள சிங்க்ரோ சர்வ் குளோபல் சொல்யூஷன் திட்ட பயிற்சி மையத்தில் புதிய திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் துவக்க விழா மற்றும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் எம்பலம் செல்வம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊரக மேம்பாட்டு முகமை அரசு செயலர் நெடுஞ்செழியன், முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அடப்பா ராஜா சுரேஷ்குமார், வேளாண் அறிவியல் நிறுவனத் தலைவர் அக்ரி கணேஷ் ,கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்.
    • வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டனர்,

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கல்லூரியின் வணிகவியல் துறை, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் லட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் அஜய் மற்றும் கல்வி ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

    • புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை சுசிலாபாய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி துணைமுதல்வர் சுகந்தி ராஜவேலு தலைமை தாங்கினார்.

    புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர் செல்வமுத்து மாணவர் முன்னேற்றத்திற்கு திறன் மேம்பாட்டு பற்றி விளக்கினார்.

    பள்ளி துணை முதல்வர் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை பற்றி விளக்கி கூறினார். அன்னை தெரசா மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

    விழாவின் ஏற்பாடுகளை அன்னை தெரசா மக்கள் இயக்க நிர்வாகிகள் செல்வபாண்டியன், கிருஷ்ணவேணி, கம்சலை, பைரவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை நன்றி கூறினார். 

    • கோவிந்தபேரி ஊராட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • மீன் வளத்துறை அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு மீன் வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார்.

    கடையம், ஜூலை.31-

    தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். மீன் வளத்துறை அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு மீன் வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார். பயிற்சியில் தெட்சணாமூர்த்தி, சிங்கக்குட்டி, ராமசாமிதேவர், மாணிக்கம், முருகன், குமார் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


    • பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
    • பயிற்சியில் கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்பபட்டன.

    நெல்லை:

    பாளை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவும், பயிற்சி மற்றும் மேம்பாட்டு குழுவும் இணைந்து பேராசிரியர்களுக்கான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். கணிதவியல் துறை ஆராய்ச்சி ஆலோசகர் இந்திராணி தொடக்கவுரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற என்.எல்.சி. பொது மேலாளர் நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பேராசிரியர்கள் சிறு, சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.கணினி வழி விளக்க காட்சிகள் ஒளிபரப்ப பட்டன.

    முடிவில் தேசிய உள்தர மதிப்பீட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை தலைவருமான ரேணுகா நன்றி கூறினார். உதவி பேராசிரியர் ஜானகி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். #PMModi #MannKiBaat
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ‘மனதின் குரல்’ என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் பேசியதாவது:-

    அண்மையில் தாய்லாந்து நாட்டின் கால்பந்து குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்கள் பயிற்சியாளருடன் நீரோட்டமுள்ள ஒரு குகையை பார்வையிட சென்றபோது அதனுள் சிக்கிக் கொண்டனர். பெரும் ஆபத்து சூழ்ந்த நிலையில் அனைவரும் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

    அந்த சிறுவர்கள் நம்பிக்கை தளரவிடாமல் இருந்ததைப் பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது. அனைவரும் உறுதியாகவும், திட மனது கொண்டவர்களாகவும் இருந்தால் எத்தகைய கடினநிலையில் இருந்தும் விடுபடலாம் என்பதை இந்தச் சம்பவம் நம் அனைவருக்கும் உணர்த்தி இருக்கிறது.

    பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தற்போது கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடங்கும் நேரம் இது. மாணவர்கள் தங்களை சுய உத்வேகம் கொண்டவர்களாக, வழிகளை அறிந்து கொள்பவர்களாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

    அதே நேரம் அமைதியாக இருங்கள். வாழ்க்கையில் உங்களுடைய உள்மன அமைதியை முழுமையாக அனுபவியுங்கள். புத்தகங்கள் மிகவும் அவசியம். படிப்பதும் முக்கியம்தான். புத்தம் புது விஷயங்களை தேடும் இயல்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஆசாராம் சவுத்ரியின் தந்தை துப்புரவு பணியாளர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் ஆசாராம் சவுத்ரி, எய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் இணைந்துள்ளார். இப்படி எத்தனையோ மாணவர்கள் கடின சூழ்நிலைகளையும் தடைகளையும் தாண்டி தங்களது அயராத முயற்சியால் சாதித்து காட்டி உலகை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.

    சுய ராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் பால கங்காதர திலகர். சாகசமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவர். மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தவறுகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டியவர். 3 முறை ராஜ துரோக குற்றச்சாட்டை அவர் மீது வெள்ளையர்கள் வைத்தனர். அவருடைய முயற்சிகள் காரணமாகவே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பாரம்பரியம் உண்டானது.

    இந்த பண்டிகை, சமூக விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த செயல்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளை முன்னெடுத்துச் செல்ல வல்லமைமிக்க ஒரு கருவியாக மாறியிருக்கிறது.

    இந்த முறையும் நாம் விநாயகர் சதுர்த்தியை மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடுவோம். விநாயகரின் திருவுருவத்தை அலங்கரிப்பது முதல் அனைத்துப் பொருட்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PMModi #MannKiBaat  #tamilnews 
    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புக்கான ஸ்டார்ட் அப் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான தொடக்கநிலைக் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மாநில பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பல்கலைக்கழகங்களின் பணி, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உயர்கல்வியில் தமிழகம் முதன்மை இடம் பெற்று திகழ்வதாகவும், தொழில்துறையில் வளம்கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.

    ‘நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்பது அவசியம். அந்த பயிற்சி நமது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். விரைவாக வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனை திட்டமிட்டு வடிவமைக்கக் கூடிய பொறுப்பு நமது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தான் உள்ளது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது’ என்றும் அமைச்சர் பேசினார்.

    கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். #AnnaUniversityConference
    ×