என் மலர்
உள்ளூர் செய்திகள்

திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.
உடுமலை மகளிர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி
- "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்.
- வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டனர்,
உடுமலை :
உடுமலை ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கல்லூரியின் வணிகவியல் துறை, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் லட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் அஜய் மற்றும் கல்வி ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் கலாவதி நன்றி கூறினார்.






