என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் மீன்வளர்ப்பு பயிற்சி நடைபெற்ற காட்சி.
கடையம் அருகே மீன்வளத்துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
- கோவிந்தபேரி ஊராட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
- மீன் வளத்துறை அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு மீன் வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
கடையம், ஜூலை.31-
தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இசேந்திரன் முன்னிலை வகித்தார். மீன் வளத்துறை அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு மீன் வளர்ப்பு பற்றி விரிவாக எடுத்து கூறினார். பயிற்சியில் தெட்சணாமூர்த்தி, சிங்கக்குட்டி, ராமசாமிதேவர், மாணிக்கம், முருகன், குமார் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






