என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 150 பேர் மீது வழக்கு
- வெங்கடாசலபுரம் கிணற்றில் இருந்து அளவந்தான்குளம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர்கள் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நெல்லை:
மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சுசிலா பீட்டர் என்பவர் பணி புரிந்து வருகிறார். வெங்கடாசலபுரம் கிணற்றில் இருந்து அளவந்தான்குளம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் அமைக்க ஊராட்சி ஒன்றிய செயல் முறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அலவநதான்குளம் கிராமத்திற்கு என்று தனியாக பைப்லைன் அமைக்க கூடாது என்று நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த காலங்கரையான் என்பவரின் தலைமையின் கீழ் நெல்லை திருத்து பகுதியை சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்து அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மானூர் போலீஸ் நிலையத்தில் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






