search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarr Road"

    • தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் அரசன் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 50). இவர் நெல்லை டவுன் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசன் நகர் பகுதியில் வீடுகட்டி மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் சுமார் 20 வீடுகள் உள்ளன. இந்த தெருவில் 500 மீட்டர் தூரத்தில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலையை ஒரு நபர், சிலருடன் வந்து சாலையில் குறுக்காக கல் தூண்கள் நட்டு பாதையை மறைக்க முயற்சி செய்தார். இதற்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் வந்து தார் சாலையை மறைத்து கல்தூண் நடுவதற்கு முயற்சி செய்தார்கள். இதனை நாங்கள் தட்டிக்கேட்டபோது என்னையும், எனது கணவரையும் பார்த்து அவதூறாக பேசினார்கள். சாலையை மறைக்க முயற்சி செய்ததை தட்டிக்கேட்டதால் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    இது தொடர்பாக டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
    • பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தனர்.

    இதனையடுத்து நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை சுமார் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

    இதில் மானூர் யூனியன் கவுன்சிலர் முபின் முகமது இஸ்மாயில், பாளை யூனியன் கவுன்சிலர் ராஜாராம், திருவேங்க டநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கும ரேசன், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் கவிதா, நிர்வாகிகள் சந்தி ரசேகர், ஆவுடையப்பன், தி.மு.க. கிளை செயலாளர் குன்னத்தூர் ராஜகோபால், வேலாயுதம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி சரவணாபுரத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் சரவணாபுரம் முதல் சண்முகநாதபுரம் வரை தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் விஜயகுமார், தளவாய்புரம் கிளை செயலாளர் வேல்பாண்டியன், சரவணாபுரம் கிளை நிர்வாகிகள் ஜெயராஜ், பெரியசாமி, வாசுதேவநல்லூர் ஒன்றிய உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர்கள் கதிர், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தன.
    • மழைநீர் தேங்காதபடி சாலையை உயர்த்தி அமைக்க மனுவில் கூறி இருந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் நான்குவழி சந்திப்பில் இருந்து தாண்டவன்காடு செல்லும் மெயின் ரோட்டில் பண்டாரஞ்செட்டிவிளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிவலூர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பள்ளமாகவும், குண்டும், குழியுமாக பல ஆண்டுகள் இருந்தன.

    அமைச்சரிடம் மனு

    மேலும் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக இருந்தது. இருசக்கர வாகனம் ஓட்டிகள் உட்பட அனைத்து பயணிகளும் இவ்வழியாக செல்லும் போது கடும் அவதிப்பட்டனர்.

    எனவே இந்த சாலைகளை புதுப்பித்து, உயர்த்தி அமைக்க வேண்டும் என்று இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் தி.மு.க.வினர் கோரிக்கை மனு கொடுத்து வற்புறுத்தி வந்தனர்.

    நடவடிக்கை

    அதில் பழுதடைந்துள்ள இந்த சாலைகளை புதுப்பித்து மழைநீர் தேங்காதபடி உயர்த்தி அமைக்க வற்புறுத்தி இருந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நெடுஞ்சாலைத்துறையினர் மழைநீர் தேங்காத அளவுக்கு சாலையை உயர்த்தி இருவழி சாலைகளாக அமைத்தனர்.

    பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்பட்ட சாலையை சீரமைத்ததால் பயணிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தார்ச்சாலை வெப்பத்தால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
    • பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    விசாக திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்ற னர்.

    சாலையில் தண்ணீர்

    இதன்படி அவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அத்துடன் தார்ச்சாலை வெப்பத்தால் சூடு தாங்காமல் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் செல்லும் சாலைகளில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பக்தர்கள் மகிழ்ச்சி

    இதனால் ஏற்பட்ட குளுமை காரணமாக பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும் பேரூராட்சியின் பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர் பானம் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்க ர்களை பக்தர்களின் பின்புறம் ஒட்டு வதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சி லர்கள் வெங்கடேஷ், ஆறுமுக நயினார், பேரூ ராட்சி சுகாதார மேற்பார் வையாளர் கார்த்திக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • பேட்டையில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலைகள் மோசமாக காணப்பட்டது.
    • பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிக்குள் நுழையும் முக்கிய எல்லை பகுதிகளில் ஒன்றாக குற்றாலம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் நெல்லை மாநகருக்குள் நுழைகிறது.

    அதேபோல் நெல்லையில் இருந்து தென்காசி, குற்றாலம் செல்லும் கார்கள், வாகனங்கள், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் தொண்டர் சன்னதி முதல் வழுக்கோடை வரையிலான சாலை ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் இரு மார்க்க மாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் அரியநாயகி புரம் கூட்டு குடிநீர்திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, வாறு கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பேட்டையில் இருந்து தொ ண்டர் சன்னதி, நயினார் குளம் வழியாக டவுன் ஆர்ச் வரையிலும் சாலைகள் மிகவும் மோசமாக காணப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் தொண்டர் சன்னதி முதல் டவுன் ஆர்ச் வரையிலும் தற்போது தார்ச் சாலை அமைக்கப் பட்டு சீரான போக்குவரத்து நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஆனால் பேட்டையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் உள்ள சாலையானது மேடு, பள்ளங்களாக காட்சி யளிக்கிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் அந்த சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு, மேடு-பள்ளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது நெடுஞ்சா லைத்துறை சார்பில் இருபுறமும் வாறுகால் அமைக்கும் பணி நடை பெற்று வரும் நிலையில், அந்த பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. அந்த பணி தாமதம் அடையும் பட்சத்தில் தற்காலிகமாக பள்ளங் களில் ஜல்லிகளை கொட்டி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகர கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் நகர்புற சாலைகள் மேம்பாட்டு நிதியில் (2022 -2023) ரூ.9 கோடியே 26 லட்சம் மதிப்பில் 25.21 கிலோ மீட்டர் நீளத்திற்கு 91 சாலைகள் அமைக்க அரசாணை எண் 192-ன் படி முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் கட்டும் (தொகுப்பு 1) பனியினை உலக வங்கி நிதி ஆதாரத்துடன் கடன் மான்யம் மற்றும் உள்ளாட்சி பங்கு தொகையுடன் 6 சிப்பந்திகளாக 96.2 கோடியில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    மேற்கொள்ளப்பட்ட 6 பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    முடிவுற்ற பணிகளுக்கு ரூ.10.51 கோடி மான்யம் வரவேண்டி உள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மின் கோபுரங்களை மாற்றி அமைக்க வேண்டியது இருப்பதால், அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு கடன் தொகை முழுமையாக பெறாமல் இருப்பதால்

    நிலுவைத் தொகையை வசூலிக்க தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் முலம் கால நீட்டிப்பு செய்து தரக்கோரி முன்மொழிவு செய்ய மாமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார்.

    தொடர்ந்து அனுமதி அற்ற கட்டிடங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்ட மணி,கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி,ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன், ஹரிகணேஷ், ராஜபாண்டி உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×